HomeMovie Review‘இறைவன்' சினிமா விமர்சனம்

‘இறைவன்’ சினிமா விமர்சனம்

Published on

‘இளம்பெண்களை கொன்று குவிக்கும் சைக்கோ கில்லரை வேட்டையாடும் போலீஸ்’ என்ற சிம்பிளான ஒன்லைனில் உருவான ‘இறைவன்.’

நகரத்தில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு, கால்கள் அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு, வாய் உடைக்கப்பட்டு குரூரமாக கொலை செய்யப்படுவது தொடர்கிறது. மக்களிடம் பயம் தொற்றுகிறது.

காவல்துறை உயரதிகாரியான ஜெயம் ரவி தலைமையிலான குழு கொலைகளை செய்பவனை தேடிப்பிடித்து சிறையிலடைக்கிறது. அங்கிருந்து அந்த சைக்கோ தப்பிவிட கொலைகள் தொடர்கிற சூழ்நிலை. மீண்டும் களமிறங்குகிறது காவல்துறை. அதன் ரிசல்ட் என்ன என்பதே திரைக்கதை. இயக்கம் ஐ அஹமது

ஏற்றிருக்கும் போலீஸ் வேடத்துக்கு உடற்கட்டாலும் உடல்மொழியாலும் தேவையான கம்பீரத்தை கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி.

கதாநாயகனை ஒருதலையாக காதலிப்பதை தவிர நயன்தாராவுக்கு பெரிதாய் எந்த வேலையுமில்லை. அந்த வேலையை இயல்பாக செய்திருக்கிறார்.

சைக்கோவாக ராகுல் போஸ். பெண்களை கொடூரமாக சித்ரவதை செய்து அவர்கள் வலியில் துடிப்பதை ரசித்து, குரூரமாக கொலை செய்யும் காட்சிகளில் உயிர் நடுங்கச் செய்கிறார்.

மற்றொரு சைக்கோவாக வினோத் கிஷன். அளவோடு நடித்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.

தன் மகளின் சடலத்தைப் பார்த்து, அவளுக்கு வலிக்காமல் நானே போஸ்ட் மார்ட்டம் செய்வேன்’ என்று சொல்லி கதறியழும் சார்லியின் நடிப்பு மனம் கனக்கச் செய்கிறது.

புத்திசாலித்தனமாக எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும்படி உருவாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி வேடங்களில் ஆஷிஷ் வித்யார்த்தி, பக்ஸ்… இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஹீரோவுக்கு நண்பனாக வருகிற நரேன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பு கச்சிதம்.

யுவனின் பின்னணி இசை மிரட்டலான காட்சிகளுக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது.

ஹரி வேதாந்தின் ஒளிப்பதிவு நேர்த்தி.

சைக்கோ கில்லர் இருக்கும் இடத்துக்கு போலீஸ் மிக சாதாரணமாக போய்வருவதெல்லாம் படத்திலிருக்கும் புதுமை.

ரத்த ஆறு ஓடுகிற சைக்கோ கில்லர் படங்கள் உங்கள் சாய்ஸ் என்றால் ‘இறைவனை’ பார்க்க தியேட்டருக்கு கிளம்பலாம். மற்றவர்கள் அப்படியான படங்களை எடுப்பவர்களை திருத்த ‘கடவுளை’ பிரார்த்திக்கலாம்!

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...
‘இளம்பெண்களை கொன்று குவிக்கும் சைக்கோ கில்லரை வேட்டையாடும் போலீஸ்' என்ற சிம்பிளான ஒன்லைனில் உருவான ‘இறைவன்.' நகரத்தில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு, கால்கள் அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு, வாய் உடைக்கப்பட்டு குரூரமாக கொலை செய்யப்படுவது தொடர்கிறது. மக்களிடம் பயம் தொற்றுகிறது. காவல்துறை உயரதிகாரியான ஜெயம் ரவி தலைமையிலான குழு கொலைகளை செய்பவனை தேடிப்பிடித்து சிறையிலடைக்கிறது. அங்கிருந்து அந்த சைக்கோ தப்பிவிட கொலைகள் தொடர்கிற சூழ்நிலை. மீண்டும்...‘இறைவன்' சினிமா விமர்சனம்