HomeGeneralதுல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்' படப்பிடிப்பு நிறைவு!

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு!

Published on

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஐ ஆம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this