HomeGeneralவிஷ்ணு விஷால் - இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்து உருவாக்கும் ‘இரண்டு வானம்' கோடை விடுமுறையில்...

விஷ்ணு விஷால் – இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்து உருவாக்கும் ‘இரண்டு வானம்’ கோடை விடுமுறையில் வெளியாகிறது!

Published on

விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக கோடையில் வெளியாகிறது. இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகிலனர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தொழில்நுட்ப காரணங்களாலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்த வருடம் வழங்க இருக்கிறது.
இரண்டு வானங்கள்,  ஒரே பார்வை, பேரார்வத்தோடு இயங்கும் உலகம் என இந்த கோடையில் திரையரங்குகளில் வெளியாகிறது ‘இரண்டு வானம்’.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this