HomeCinemaஎஸ்டோனியா  ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக பிளாக்பஸ்டர் 'நெலும் குலுனா', 'பெருசு' 'பெருசு' பட...

எஸ்டோனியா  ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக பிளாக்பஸ்டர் ‘நெலும் குலுனா’, ‘பெருசு’ ‘பெருசு’ பட இயக்குநர் இளங்கோ ராம்!

Published on

சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் (FIAPF) அங்கீகரிக்கப்பட்ட ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவாக வகைப்படுத்தப்பட்ட எஸ்டோனியாவில் நடைபெறும் தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழா, அதன் 29வது பதிப்பை எஸ்டோனியாவின் தாலினில் நிறைவு செய்தது.

இந்த ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமான முதல் சிறப்புப் போட்டி நடுவர் குழுவில் பணியாற்ற பிளாக்பஸ்டர் ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம் நியமிக்கப்பட்டார். இளங்கோ ராமின் திரைப்படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) 2023 ஆம் ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு சிறப்பு நடுவர் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போட்டிப் பிரிவில் நடுவர் குழு உறுப்பினராக 2025 இல் அவர் நியமிக்கப்பட்டிருப்பது கெளரவமாகும்.

இந்த ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழு 9 முக்கிய விருது பிரிவுகளில் முடிவுகளை அறிவித்தது.

FIAPF ஆல் ஏ- லிஸ்ட் திரைப்பட விழாவாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர், தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் பணியாற்றும் முதல் இலங்கையர் என்ற பெருமையையும் இளங்கோ ராம் பெற்றுள்ளார் என்பது மகிழ்ச்சிமிக்க தருணம்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this