HomeCinemaஎன் படம் என்பதால் சொல்லவில்லை; உண்மையிலேயே மிக வித்தியாசமான படம் இது! -இந்திரா பட விழாவில்...

என் படம் என்பதால் சொல்லவில்லை; உண்மையிலேயே மிக வித்தியாசமான படம் இது! -இந்திரா பட விழாவில் நடிகர் வசந்த ரவி உறுதி

Published on

வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில், சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள ‘இந்திரா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னதாக படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய படத்தின் நாயகன் நடிகர் வசந்த் ரவி, ”இந்திரா படம் ஒவ்வொரு நொடியும் உங்களை மகிழ்விக்கும். என் படம் என்பதால் சொல்லவில்லை, உண்மையிலேயே மிக வித்தியாசமான படம். சபரீஷ் கதை சொன்ன நொடியிலிருந்து படம் முடித்து வரும் வரை, படத்தில் உழைத்த அனைவரும் ஒரே உணர்விலிருந்தோம். படம் மிக அழகாக வந்துள்ளது. மெஹ்ரீன் நிறையத் தெலுங்கு படம் செய்துள்ளார் இந்த கேரக்டர் அழுத்தமானது எப்படிச் செய்வார்  என்று நினைத்தோம் ஆனால் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சுனில் சார் பற்றிச் சொல்லத் தேவையில்லை, அவர் தெலுங்கில் பண்ணாத ரோலே இல்லை, ஆனால் இது கண்டிப்பாக அவருக்கு வித்தியாசமான ரோலாக இருக்கும். அவர் மாதிரி ஒரு ஹம்பிளான மனிதரைப் பார்க்கவே முடியாது. அவர் மாதிரி இந்த ரோலை யாருமே செய்திருக்க முடியாது.

டிரைடண்ட் ரவி சார் உள்ளே வந்த போது, எல்லோருக்குமே பெரிய நம்பிக்கை வந்தது அவருக்கு நன்றி. ஜாஃபர் சகோதரருக்கு நன்றி. என் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்க வேண்டும் என நினைத்துத் தான் செய்கிறேன். தரமணி, ராக்கி, ஜெயிலர் மாதிரி  இந்திரா முக்கியமான படமாக இருக்கும். இது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரில்லராக இருக்கும். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், எல்லோரும் தியேட்டரில் வந்து பாருங்கள்” என்றார்.

இயக்குநர் சபரீஷ், ”எனக்கு இந்தப்படம் தந்ததற்குத் தயாரிப்பாளர் ஜாஃபர் மற்றும் இர்ஃபான்  சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து உழைத்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், என் இயக்குநர் குழு எல்லோருக்கும் நன்றி. 11 வருடங்கள் முன்பு ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன், அப்போதிலிருந்து இந்த படத்திற்காக உழைத்து வருகிறேன். ஆகஸ்ட் 22 உங்கள் பார்வைக்கு வருகிறது. இப்படத்திற்காக எல்லோரும் உழைத்திருக்கிறோம். நான் திரில்லர் பட ரசிகன் அதனால் தான் திரில்லர் படம் செய்தேன். வசந்த் ரவி  சார் திரில்லர் படம் நடிப்பதில்லை எனும் மூடில் இருந்தார், ஆனால் என் கதை கேட்டு நடிக்க வந்தார். கண்டிப்பாக நீங்கள் அனைவரும் ரசிக்கும் படைப்பாக இப்படம் இருக்கும்”  என்றார்.

நடிகர்  சுனில் ”தமிழ்நாடு. எனக்கு பெரும் ஆதரவு தருகிறீர்கள். சபரீஷ் முதலில் கதை சொன்ன போது, நான் வாழ்க்கையில் அது மாதிரி கேரக்டரே கேட்டது இல்லை. டப்பிங் போது எனக்கே பயமாக இருந்தது. 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன், 1000 படங்களுக்கு மேல் பார்த்துள்ளேன் ஆனால் இது மாதிரியான ஒரு கதை பார்த்ததே இல்லை. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. வசந்த் ரவி மிக இனிமையாகப் பழகினார். வித்தியாசமான படங்கள் மட்டும் தான் செய்கிறார். இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this