Wednesday, March 11, 2026
spot_img
HomeCinemaஎனக்குள் ஒரு இதயம் முரளி இருக்கிறான்; எல்லோருக்குள்ளும் இருப்பான்! -இதயம் முரளி' படத்தின் டீசர் வெளியீட்டு...

எனக்குள் ஒரு இதயம் முரளி இருக்கிறான்; எல்லோருக்குள்ளும் இருப்பான்! -இதயம் முரளி’ படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் அதர்வா முரளி பேச்சு 

Published on

தமிழ்த் திரையுலகில் பிரமாண்டமாக நுழைந்து, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, #STR49 படத்தினைத் தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும் ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் ‘இதயம் முரளி’ படத்தைத் தயாரிக்கிறது ஆகாஷ் பாஸ்கரனின் ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம்.

படத்தை தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது முக்கியச் செய்தி.

காதலின் மெல்லிய உணர்வுகளை கொண்டாடும் ஒரு படைப்பாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் உற்சாகமாக நடந்தது.

நிகழ்வில் பேசிய நடிகர் அதர்வா, ”ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் இதயம் முரளி, என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இருக்கும். இயக்குநர் ஆகாஷுக்கு நன்றி. இதயம் முரளி என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம், ஆகாஷ் மிகப்பெரிய தயாரிப்பாளர், அவரை ஒரு இயக்குநராகத் தான் தெரியும். இந்தக்கதையை 2017ல் சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார், அதன் பிறகு இப்போது இந்தப்படம் செய்யலாம் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், ”தயாரிப்பை விட இயக்கம் தான் ஈஸி, சின்ன வயதிலிருந்து எனக்கு இயக்குநராகும் ஐடியா இருந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென உருவாக்கிய திரைக்கதை இது. இப்படம் நம் காதல், நட்பை ஞாபகப்படுத்தும். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி. இது ஒரு அழகான காதல் படமாக இருக்கும்” என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன், ”ரசிகர்கள் எனக்கு தந்து வரும் அன்புக்கு நன்றி. இப்படத்தின் கதை பற்றி இப்போது சொல்ல மாட்டேன், உங்களுக்கு நிறைய ஆச்சரியம் உள்ளது. நம்முடைய கல்லூரி காலங்களில் நாம் நிறைய பேரை சந்திப்போம், பல அனுபவங்கள் இருக்கும், அதை ஞாபகப்படுத்தும் படமாக இப்படம் இருக்கும். இந்த டீம் ஃபேமிலி மாதிரி, ஷூட்டிங் மிக ஜாலியாக இருக்கிறது. படம் மிக நன்றாக இருக்கும்” என்றார்.

பாடலாசிரியர் விவேக், ”இந்த டீம் மிக அற்புதமான டீம். இவர்களுடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். ஆகாஷ் மிகத் திறமையான இயக்குநர். அவரும் தமனும் சேர்ந்து அட்டகாசமான ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தமன் பிரதர் எனக்கு எப்போதும் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். அவருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதர்வாவுடன் வேலை பார்ப்பதை பெருமையாக கருதுகிறேன். இப்படத்தில் நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகர் ரக்‌ஷன் ”ஆகாஷ் தமிழ் சினிமாவில் புயல் போல நுழைந்து, பெரிய பெரிய படங்கள் செய்து வருகிறார். உண்மையில் அவர் தயாரிப்பாளர் என்பதை விட இயக்குநர் தான். அவர் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இந்த டீசரே கலக்கலாக இருக்கிறது. படத்தில் நானும் அதர்வாவுடன் அமெரிக்கா செல்வேன். இந்தப்படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்” என்றார்.

பரிதாபங்கள் புகழ் சுதாகர் மற்றும் டிராவிட், ”நாங்கள் இருவரும் இந்தப்படத்தில் நாயகனின் நண்பர்களாக வருகிறோம். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றனர்.

நடிகை பிரக்யா நாக்ரா, நடிகையும் தொகுப்பாளினியுமான ஏஞ்சலினா, நடிகை கயாது லோஹர், பாடகியும் நடிகையுமான ஜொனிடா காந்தி, நடிகை நிஹாரிகா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!