HomeMovie Reviewஇராமாயணம் சினிமா விமர்சனம்

இராமாயணம் சினிமா விமர்சனம்

Published on

இராமாயணம் எல்லோருக்கும் தெரிந்த கதை. அதை படமாக எடுப்பவர்கள் கதையிலுள்ள சம்பவங்களில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்ய வாய்ப்பிருக்கிறது. காரணம் வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் என பல இராமாயணங்கள் உண்டு. இந்த படத்தில் நாம் பார்க்கிற இராமாயணம் வால்மீகி இராமாயணம். இரண்டு பாகமாக எடுக்கப்பட்டு முதல் பாகம் இப்போது திரைக்கு வந்திருக்கிறது.

இராவணன் மூவுலகையும் ஆளும் சக்தி பெற்றவனாக உருவாவதிலிருந்து சீதையைக் கடத்துவரை முதல் பாகம் நிறைவுக்கு வருகிறது.

இராவணன் மூவுலகையும் ஆளும் சக்தியை எப்படி பெற்றான், சீதையை ஏன் கடத்தினான் என்பதையெல்லாம் மிகமிக விரிவாக காட்டுவதற்கே இந்த பாகத்தின் பெரும்பகுதி செலவாகியிருக்கிறது. மிச்சமிருக்கும் காட்சிகளில் ராமன் சுயம்வரத்தில் கலந்துகொண்டு வில்லை உடைப்பது, சீதையை மணப்பது, அரசனாக முடியாமல் வனவாசம் செல்வது, ராமரை அவரது தம்பி பரதன் வனத்தில் சந்திப்பது, இராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமர் மீது ஈர்ப்பு கொள்வது, சீதையை இராவணன் கடத்தியதும் அவனை அழிக்க சபதமெடுப்பது என சிலவற்றை கண்டு களிக்கலாம். இயக்கம்

இராவணனாக யஷ். மூன்று உலகையும் ஆளும் வேந்தனாக கம்பீரம், சண்டையிடுவதில் வெறித்தனம் என துவம்சம் செய்திருக்கிறார்.

இராமனாக ரன்பீர் கபூர். நடிப்பில் எல்லாவிதமான உணர்வுகளையும் அலட்டலில்லாமல் கொண்டு வந்திருக்கிறார். சீதையாக சாய் பல்லவி. அவர் பேசினால் அவர் செவிகளுக்குக் கூட கேட்குமா என்பது சந்தேகம். அத்தனை தன்மையாக பேச்சு, கருணை நிரம்பி வழியும் முகம் என மனதில் நிறைகிறார்.

தசரதன், லெஷ்மணன், பரதன், கைகேயி, சூர்ப்பனகை, மண்டோதரி, அரக்கர்கள், முனிவர்கள் என மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் ஒட்டுமொத்த நடிகர் நடிகைகளும் ஈடுபாட்டுடன் நடித்திருக்க, ஜடாயு பறவையின் வடிவமைப்பும் அதற்கான உணர்வுபூர்வமான காட்சிகளும் அசத்துகிறது.

போர்க்கள காட்சிகளுக்கு அதிரடியாகவும், பக்திப் பரவசம் ததும்பும் காட்சிகளுக்கு இதமாகவும் பின்னணி இசை தந்திருக்கும் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களாலும் கவர்கிறார்.

சிஜி, வி எஃப் எக்ஸ், கலை இயக்கம் என அனைத்து துறையினரும் படத்தை பிரமாண்டமாக்கி, தரத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ‘3 D’யில் பார்க்கும் அனுபவம் மனதை உற்சாகமாக்குகிறது. தமிழ் டப்பிங் தரம்.

படத்தின் நிறைவில் அனுமனாக பாபி தியோல் என்ட்ரி கொடுப்பது இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

Rating 3.5 / 5 

Latest articles

‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் ‘வீராவி’ கதாபாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு கடந்த இரு பாகங்களாக பெரும் வெற்றி பெற்ற 'பொலிமேரா' திரைப்பட வரிசையின் மூன்றாம் பாகமான...

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ‘பௌமா’, ‘டூக்ஸ்’ ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது!

ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் 'பௌமா' மற்றும்...

தீபாவளி ட்ரீட்’டாக வெளியான ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் முதல் பார்வை! 

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் 'மரகத நாணயம்2' திரைப்படத்தின்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவிக்கும் வனமடி விரைவில் ரிலீஸ்! ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்கிய முதல் படமாக உருவாகியுள்ளது. 

சென்டர் சீட் சினிமாஸ் விஜயராகவன் தயாரிப்பில், ஞானம் சுப்பரமணியனின் நிர்வாக மேலாண்மையில் உருவாகும் படம் ‘வன மடி.' ‘மாத்தி யோசி’,...

More like this