HomeGeneralதீபாவளி ட்ரீட்'டாக வெளியான 'மரகத நாணயம் 2' திரைப்படத்தின் முதல் பார்வை! 

தீபாவளி ட்ரீட்’டாக வெளியான ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் முதல் பார்வை! 

Published on

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ‘மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் பாகம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் மூலம் ARK சரவன் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, வெளியீட்டிற்கு தயாராகி வரும் இதன் இரண்டாம் பாகத்தையும் இவரே எழுதி இயக்கியுள்ளார்.
சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை கலந்த சாகசப் பயணம் என இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.
படத்தின் இயக்குநர் ARK சரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும்  கிட்டத்தட்ட மீண்டும் இடம்பெற்றுள்ளனர். ஆதி, பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, டேனியல் ஆனே போப், முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் மற்றும் முருகானந்தம் சார் எனப் பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கதையில் எப்படி கனெக்ட் ஆகிறார்கள், எந்த இடத்தில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு படம் பார்க்கும்போது சர்ப்ரைஸாக இருக்கும். முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த அதே நகைச்சுவை, சாகசம், ஆக்‌ஷன் என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் அப்படியே இருக்கும். மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளது.
டிரெய்லரில் படத்தின் சிறிய முன்னோட்டம் வெளியாகும். அதன்பிறகு, படம் பார்க்கும்போது இன்னும் பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்காகக் காத்திருக்கின்றன. முதல் பாகத்தில் நிக்கியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. அதேபோல், இந்தப் பாகத்திலும் அவருடைய கதாபாத்திரம் வலுவானதாகவும் ஸ்பெஷலாகவும் இருக்கும். படம் வெளியாகும்போது அதை ரசிகர்கள் தெரிந்துகொள்வார்கள்” என்றார்.
‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை சுதன் சுந்தரம், தேவ், கே.வி. துரை, மனிஷ் சிங்கள் மற்றும் துர்கம் சௌத்ரி ஆகியோர் பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.

Latest articles

‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் ‘வீராவி’ கதாபாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு கடந்த இரு பாகங்களாக பெரும் வெற்றி பெற்ற 'பொலிமேரா' திரைப்பட வரிசையின் மூன்றாம் பாகமான...

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ‘பௌமா’, ‘டூக்ஸ்’ ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது!

ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் 'பௌமா' மற்றும்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவிக்கும் வனமடி விரைவில் ரிலீஸ்! ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்கிய முதல் படமாக உருவாகியுள்ளது. 

சென்டர் சீட் சினிமாஸ் விஜயராகவன் தயாரிப்பில், ஞானம் சுப்பரமணியனின் நிர்வாக மேலாண்மையில் உருவாகும் படம் ‘வன மடி.' ‘மாத்தி யோசி’,...

லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் ‘ஆர்.எக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு! 

இந்திய சினிமா ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், இந்திய திரையுலகின்...

More like this