HomeGeneralடாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த 'இது நம்ம குடும்பம்' டிரெய்லர் வெளியீட்டு விழா!

டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ‘இது நம்ம குடும்பம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

Published on

ஆனந்த் பாபு கதையின் நாயகனாக நடிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி சைதன்யா சங்கரன் இயக்கியிருக்கும் படம் இது நம்ம குடும்பம்.’

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 15-ம் தேதி, மாலை, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொணடார். இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சைதன்யா சங்கரன் பேசுகையில், “இது நம்ம குடும்பம் என்று பெயரை கேட்டாலே சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவும் நம்ம குடும்பம் தான் என்று மேடம் சொன்னாங்க. அதேபோல், இந்த படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் எனக்கு வந்து, என்னை ஆசிர்வதித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் வெற்றியடைய உங்கள் அனைவரது ஒத்துழைப்பும், உறுதுணையும் வேண்டும். ஊடகங்கள் இந்த படத்தை நல்ல முறையில் சிறப்பாக கொண்டு செல்வார்கள், என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தை வெள்ளித்திரையில் பார்த்து வாழ்த்த வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
படத்தின் நாயகன் ஆனந்த் பாபு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், முக்கியமான இந்த விழாவை பெருமைப்படுத்த வந்த மதிப்புக்குரிய டாக்டர்.தமிழை செளந்தராஜன், அண்ணன் ராதகிருஷ்ணன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சுப்பிரமனணிய சிவா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இது ஒரு வித்தியாசமான படம். இது நம்ம குடும்பம் என்பதற்கான அர்த்தத்தை மக்களை உணர வைக்க படத்தில் பல காட்சிகள் இருக்கிறது. நானும் ஒரு மருத்துவராக ஆகியிருக்க வேண்டும், ஆகாதது விதி. நான் பெங்களூரில் மருத்துவம் படிக்க வேண்டியது. ஆனால், நான் டான்ஸை பெரிசாக்க வேண்டும், என்று விரும்பினேன். அப்போது தான் எனக்கு பட வாய்ப்பு கிடைத்து, அந்த படம் பெரிய வெற்றி பெற்றதால் இன்று நடிகனாகி விட்டேன். அதேபோல், பத்திரிகையாளர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். எனக்கு அப்பா சொல்லிக் கொடுத்த ஒரே பாடம், அவர் எதற்குமே திருப்தியாக மாட்டார், அதே மாதிரி ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு படி, ஒரு மைல்கல். இந்த படமும் எனக்கு ஒரு மைல்கல். பத்திரிகையாளர்கள் இந்த படத்திற்கு ஆதரவு அளித்து, இந்த மைல்கல்லை நல்லபடியாக கடக்க ஒத்துழைக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
படத்தின் நாயகி சாஜிதா பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் கதாநாயகியாக நடிக்கும் முதல் படத்திற்கு நீங்க வந்து ஆதரவளித்ததற்கு நன்றி. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சைதன்யா சங்கர் சாருக்கு நன்றி. இந்த படத்தில் நான் நல்லபடியாக நடித்து முடித்த உடனே, கேன்சர் என்ற பெரிய விசயம் என் வாழ்க்கையில் வந்தது. நான் இங்கு வந்து நிற்பேன் என்று நினைக்கவே இல்லை. இப்போது கேன்சரை ஜெயிச்சி  இங்கு வந்திருக்கிறேன், இப்படி இங்கு வந்து பேசுவேன் என்று நினைக்கவில்லை. இங்கு என்ன பேச வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லி விட்டேன். இது நம்ம குடும்பம் படத்தில் மக்கள் படும் கஷ்ட்டங்களை சொல்லியிருக்கிறோம், நான் எனக்கு நடந்த கஷ்ட்டத்தை சொல்லிவிட்டேன், பலர் சொல்லாமல் இருக்கிறார்கள். எனவே இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும், நன்றி” என்றார்.
 டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், “நான் ஒரு நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று அழைக்கப்பட்டவுடன், தேதி எல்லாம் பதினைந்து நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால்,  சைதன்யா சங்கரன் அவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என்று சொன்னார், இது நம்ம குடும்பம் என்பதால் வந்தேன். இது மகிழ்ச்சியான தருணம். இந்த பக்கம் ஆர்.வி.உதயகுமார், அந்த பக்கம் பேரரசு, இவர்கள் இருவரும் சிறந்த இயக்குநர்கள். ஒரு பக்கம் உதயமாகி, மறுபக்கம் பேரரசாக ஆக வேண்டும் என்பது தான், தாமரையின் ஆசை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நடுவுல தான் நான் இருக்கேன், வர ஸ்டேட்டுக்கு வர வேண்டும் என்று தான் ஆசை, அதனால் தான் இங்கே வந்தேன். நான் சாலிகிராமத்தில் இருப்பது தான் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு, அதிகமான திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அரசியல் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் படிப்பதில் அதிகம் கவனம் செலுத்தினேன், அதனால் சினிமா மீது எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. அப்போது படித்தவர்கள் தான் அரசியல்வாதிகளாக இருந்தார்கள், இன்று நடிப்பவர்கள் அரசியல்வாதியாக மாறி வருகிறார்கள்.
மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது எங்கள் கதையே பெரிய கதையாக இருக்கும், இதனால் மற்ற கதைகளை பார்க்க நேரம் கிடைப்பதில்லை. நாங்க படிக்கும் போது ஒரு கதை சொல்வார்கள். ஒரு இயக்குநர் ஒரு மருத்துவரை அழைத்து, இந்த படத்திற்கு கதை எழுதி கொடுங்கள் என்றாராம். அதற்கு அந்த மருத்துவர் எதற்கான என்னை கதை எழுத சொல்கிறீர்கள், என்று கேட்டதற்கு, அந்த இயக்குநர், நான் கதையை தொடங்கி விட்டேன், ஆனால் முடிக்க முடியவில்லை. நீங்கள் பலரது கதையை முடித்து வைத்திருப்பதால் என்னுடைய கதையையும் முடித்துக் கொடுங்கள், என்றாராம். இந்த டாக்டர் அதற்காக வரல. ஆனாலும், கதையில் வரும் பிரச்சனை என்னவென்றால், பட்ட சரசக்கு, கெட்ட சரக்கு என்பது தான் எங்கள் கருத்து. அதனால் தான் வாழ்க்கை கெட்ட வாழ்க்கையாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால், கெட்ட சரக்கு ஈரலை எப்படி தாக்குகிறது, என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் எப்படி தாக்கிக் கொள்கிறார்களோ அப்படி தாக்கும். ஆனால், அந்த பாடல் நன்றாக இருந்தது. சங்கரன் தான் தயாரிப்பு, இயக்கம், பாடல்கள் எழுதியுள்ளார்.
அந்த காலத்து சினிமா பாடல்கள் நன்றாக இருக்கிறது, இப்போது உ ள்ள பாடல்கள் அப்படி இல்லை, என்று என்னிடம் ஒருவர் சொன்னார். பாட்டுக்கு மெட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது போகி துட்டுக்கு பாட்டு என்ற நிலை வந்து விட்டது. நல்ல படம், இது நம்ம குடும்பம் அறிவுரை சொல்லும் காட்சிகள் இருக்கிறது. மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்ச்சிகளை காண்பித்து, அதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பதை காட்டியிருக்கிறார்கள், வாழ்த்துகள். இயக்குநர் சங்கரனுக்கு வாழ்த்துகள். இனி பல திரைப்படங்களை அவர் எடுக்க வேண்டும். சினிமா துறை என்பது அதிகமாக வளரக்கூடிய துறை. சினிமா துறை மிகப்பெரிய உழைப்புள்ள துறை. நாம் ஒரு படத்தை பார்த்துவிட்டு, நல்லா இல்ல, என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்று விடுகிறோம். ஆனால், அந்த படத்திற்குப் இன்னால் எவ்வளவு பெரிய உழைப்பு, முயற்சி இருக்கிறது, என்று எனக்கு தெரியும். நானும் படத்தொகுப்பு பணிகளில் ஈடுபட்டு இருப்பதால், ஒரு திரைப்படத்திற்கான உழைப்பு எவ்வலவு பெரியது என்று தெரியும்.
என்னை பொறுத்தவரை எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சினிமாவில் நன்றாக இருப்பவர்கள் திடீரென்று இறக்கும் போது, இவர்கள் உடல்நிலையை சரியாக பார்த்துக் கொள்வதில்லையோ, என்று தோன்றும். எனவே எந்த துறையாக இருந்தாலும், அதில் நாம் மேலே வரும்போது, நம் உடல் நன்றாக இருக்க வேண்டும். நா.முத்துக்குமாரின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் இறந்த போது நான் அவர் வீட்டுக்கு சென்றேன், அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, இருந்தாலும் அங்கு சென்றதற்கு காரணம் அவரது பாடல்கள். எனவே நம் உடலை பார்த்துக் கொள்ள வேண்டும். நானும் என் அப்பாவும் வேறு வேறு கட்சி, எங்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை கூட இருக்காது. இருப்பினும், கடைசி காலத்தில் அவரை பார்த்துக்கொண்டவள் நான். அது எனக்கு பெருமை. ஒரு வயதானவர் ஒரு செல்போன் கடைக்கு வருகிறார். தன் போன் பழுதாகிவிட்டதாக சொல்லி கொடுக்கிறார். அதை பிரித்துப் பார்க்கும் கடைக்காரர், உங்கள் போன் நன்றாக தான் இருக்கிறது, என்கிறார். அப்போது ஏன் என் மகனிடம் இருந்தும், மகளிடம் இருந்தும் போன் வரவில்லை, என்று அந்த பெரியவர் கேட்கிறார். அப்போது போன் சரியாகத்தான் இருக்கிறதா, அவர்கள் தான் போன் பண்ணவில்லையா, என்று கேட்கிறார். தன் பிள்ளைகள் சரியில்லாத நிலையில் கூட, அவர் போன் தான் சரியில்லை என்று நினைக்கிறார், அது தான் குடும்பம். எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், தங்கள் குடும்பத்தையும், தாய், தந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், நம் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் எனக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் நான் இங்கே வந்ததற்கு இது நம்ம குடும்பம் என்ற தலைப்பு தான் காரணம், என்று நான் நினைக்கிறேன்.
குடும்ப சூழ்நிலை என்றால் நாட்டிற்கு தேவை, குடும்பத்திற்கு தேவை. குடும்பத்தை நல்லபடியாக வைத்துக்கொண்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். நல்லவர்களாக வாழ்வோம், அனுசரனையாக வாழ வேண்டும். கஷ்ட்டப்படுகிறவர்கள் காதில் இரண்டு நல்ல வார்த்தைகளை சொல்லுங்கள். எனவே, இது நல்ல குடும்பம் ஓட வேண்டும், ஓடவில்லை என்றால் ’இது நம்ம குடும்பம்’ என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே, ’இது நம்ம குடும்பம்’ நல்ல குடும்பமாக வலம் வந்து மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த படத்தின் 100 வது நாள் நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்க வேண்டும், என்று கூறி விடைபெறுகிறேன்” என்றார்.

Latest articles

வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்! -‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படம், கேப்காம் (CAPCOM) நிறுவனத்தின் புகழ்பெற்ற...

தந்தை – மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தில் டி. இமான் இசையில் உருவான  ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது! 

https://www.youtube.com/watch?v=Orx-D4gIsZo   அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்திலிருந்து, தந்தை - மகள்...

வெளியானது ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=AYkPRN874m8 இந்தியாவின் மிகவும் போற்றப்படும் இதிகாசங்களில் ஒன்றான ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில்...

டிரோன்ஸ் சினிமா விமர்சனம்

ஃபேண்டஸி ஹாரர், சூப்பர்நேச்சுரல் ஹாரர், காமெடி பேண்டஸி ஹாரர், சயின்டிபிக் திரில்லர், சர்வைவல் திரில்லர் என எல்லா ஜானரையும்...

More like this

வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்! -‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படம், கேப்காம் (CAPCOM) நிறுவனத்தின் புகழ்பெற்ற...

தந்தை – மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தில் டி. இமான் இசையில் உருவான  ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது! 

https://www.youtube.com/watch?v=Orx-D4gIsZo   அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்திலிருந்து, தந்தை - மகள்...

வெளியானது ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=AYkPRN874m8 இந்தியாவின் மிகவும் போற்றப்படும் இதிகாசங்களில் ஒன்றான ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில்...