HomeMovie Reviewடிரோன்ஸ் சினிமா விமர்சனம்

டிரோன்ஸ் சினிமா விமர்சனம்

Published on

ஃபேண்டஸி ஹாரர், சூப்பர்நேச்சுரல் ஹாரர், காமெடி பேண்டஸி ஹாரர், சயின்டிபிக் திரில்லர், சர்வைவல் திரில்லர் என எல்லா ஜானரையும் கலக்கியெடுத்த வித்தியாசமான முயற்சி.

ஹீரோ தன் நண்பனுடனும் நண்பியுடனும் உள்ளே போனால் வெளியில் வர முடியாத பிளாக் ஹோல் என்ற விநோத கட்டடத்துக்குள் போய் விடுகிறார். அங்கிருந்தபடி வெளி உலகத்தை தொடர்பு டிரோன் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. ஹீரோவுக்கு அதன் மூலம் ஓரு பெண்ணைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பு அவர்களை காதலர்களாக மாற்றுகிறது.

கதை இப்படி துவங்க, ஹீரோ அந்த பெண்ணைக் காதலிக்கலாமே தவிர கல்யாணம் குடும்பம் என அடுத்தகட்டத்துக்கு போக முடியாது என்கிற நிலைமை. அந்தளவுக்கு அவளிடம் என்ன பிரச்சனை? அந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பது கதையின் ஒரு பகுதி.

அதே ஹீரோ 6000 வருடங்களாக வாழ்கிற சூனியக்காரக் கிழவியுடன் மல்லுக்கட்டும் சூழ்நிலையும் உருவாக, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதும், சூனியக்காரியின் முன்கதை என்ன என்பதும் கதையின் இன்னொரு பகுதி.

ஹீரோ சிக்கிக் கொண்டிருக்கிற பிளாக் ஹோல் ஒரு ஏடாகூடமான விஞ்ஞானியின் கட்டுப்பாட்டில் இருக்க, அந்த கட்டுப்பாடுகளைத் தகர்த்து ஹீரோவும் அவனது நண்பனும் நண்பியும் வெளியில் வர முடிந்ததா, இல்லையா என்பது கதையின் இன்னொரு பகுதி.

இத்தோடு முடிந்ததா என்றால், உம்ஹூம் இல்லை. வெளியில் ஒருவர் தான் யாரிடம் காதலைச் சொன்னாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து என்கிற உலகமகா பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார். அவருக்கு என்னவாகிறது என்பதையும் சொல்கிறது இயக்குநர் ராகவ் மிர்தாத் அமைத்திருக்கும் ஸ்க்ரீன்பிளே…

கேரக்டர் ஆர்டிஸ்டாக ஒரு சில படங்களில் கவனம் பெற்ற பரிதாபங்கள் டிராவிட் செல்வம் இந்த படத்தின் ஹீரோ. காதல் உணர்வையும் அழுத்தும் பிரச்சனைகளின் தவிப்பையும் கச்சிதமான உடல் மொழியில் பார்க்க முடிகிறது.

காதலியாக சித்தி இத்னானியின் கன்னக் குழி புன்னகை மனதைக் கொள்ளையடிக்கிறது. நடிப்பு நேர்த்தி.

மனிதர்களின் நிறத்துக்கு கிடைக்கிற மரியாதை பற்றி அழுத்தமாகப் பேசுகிறது அஞ்சலி நாயரின் கதாபாத்திரம். நடிப்புப் பங்களிப்பில் ஒரு தோழி எப்படியெல்லாம் இருக்க வேண்டுமோ அப்படியெல்லாம் இருக்கிறார்.

சூனியக்காரியாக மிரட்டுகிறார் தேவதர்ஷினி. விசித்திரமாக எதையெல்லாமோ செய்கிற சயின்டிஸ்டாக குரேஷி கலகலப்புக்கு உதவுகிறார். ஆர் ஜே தீபக், சினிமாவாலா சதீஷ் உள்ளிட்டோர் கேரக்டர்களுக்கேற்ற தேர்வு.

ஹரி எஸ் ஆர் பாடல்களை துள்ளலாக வழங்கி, பின்னணி இசையில் கதையின் பரபரப்புக்கு தேவையான வேகத்தைத் தந்திருக்கிறார்.

ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே நடக்கிற சம்பவங்களை ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் படமாக்கியிருக்கும் விதம் படத்தின் பலம்.

என்னதான் நடக்குது, என்னதான் சொல்ல வர்றீங்க என்பது போல் சில காட்சிகள் பொறுமையைச் சோதிப்பதைப் பொறுத்துக் கொண்டால், மாயாஜால உலகம் ஒன்றுக்குள் அலைந்து திரிந்த சுவாரஸ்யமான உணர்வு கிடைக்கும். ஒரு படம் அதைக் கொடுத்தால் போதாது?

Rating 3.5 / 5

Latest articles

வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்! -‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படம், கேப்காம் (CAPCOM) நிறுவனத்தின் புகழ்பெற்ற...

டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ‘இது நம்ம குடும்பம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஆனந்த் பாபு கதையின் நாயகனாக நடிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி சைதன்யா சங்கரன் இயக்கியிருக்கும் படம் இது...

தந்தை – மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தில் டி. இமான் இசையில் உருவான  ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியானது! 

https://www.youtube.com/watch?v=Orx-D4gIsZo   அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்திலிருந்து, தந்தை - மகள்...

வெளியானது ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=AYkPRN874m8 இந்தியாவின் மிகவும் போற்றப்படும் இதிகாசங்களில் ஒன்றான ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில்...

More like this