HomeCinema நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் சப்ஜெக்டில் ரசிகர்களைக் கவர வருகிறது 'அந்த ஏழு நாட்கள்.'

 நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் சப்ஜெக்டில் ரசிகர்களைக் கவர வருகிறது ‘அந்த ஏழு நாட்கள்.’

Published on

பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், தனித்துவமான, தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்.

அவர் தயாரிக்கும் காதல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘அந்த 7 நாட்கள்’ திரைப்படத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்த இப்படத்தின் முதல் தனிப்பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் பகிர்ந்து கொண்டபோது, “நான் படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தபோது ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத நல்ல கதைகள் மற்றும் நல்ல சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சொல்லப்படாத பல ஜானர்களும் கதைகளும் இருக்கிறது. இதெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினர் எடுத்து செய்ய வேண்டும். அதேபோன்ற திறமையாளர்களுக்கு பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் வாய்ப்பளிக்க தயாராக உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைகளை திரும்ப திரும்ப சொல்வதை விட புதுவிதமான கதைகளை சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

தனித்துவமான கதைகள் தேடிக் கொண்டிருந்தபோதுதான் பல திருப்புமுனைகளைக் கொண்ட எம். சுந்தரின் கதை கேட்டேன். இதற்கு மேல் கதை பற்றி நான் அதிகம் சொன்னால் அது திரையனுபவத்தை குறைத்துவிடும். சுந்தர் கதை சொல்லி முடித்த உடனே இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். நடிகர்கள் தேர்வில் இருந்து தொழில்நுட்பக்குழுவினர் வரை அனைத்தும் சரியாக அமைந்தது. அஜித்தேஜ், ஸ்ரீஸ்வாதி மற்றும் மற்ற நடிகர்களும் திறமையாக நடித்து படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இந்தக் கதையின் ஆன்மாவை புரிந்து கொண்ட ஒருவர்தான் இந்தக் கதைக்கு இசையமைக்க வேண்டும் என தீர்மானித்தோம். அப்படி பல சாம்பிள் டிராக்குகள் பார்த்த பின்பு இயக்குநர் சுந்தரின் மகன் சச்சின் சுந்தர் எங்களுக்கு சரியான தேர்வாக இருந்தார். அவரது இசை படத்திற்கு புது எனர்ஜி கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த தொழில்நுட்பக்குழுவினரின் பங்களிப்பும் சிறப்பானதாக அமைந்தது.

இந்தப் படத்தின் கதை கேட்டு முடித்ததும் லெஜெண்ட்ரி இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் ‘அந்த 7 நாட்கள்’ படத்தலைப்புதான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். எங்கள் கதைக்கு இந்த தலைப்பு தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநர் பாக்யராஜ் அவர்களுக்கும் நிச்சயம் மரியாதை செய்யும் விதமாக அமையும். இதற்காக அவரிடம் அனுமதி கேட்டபோது உடனே ஒத்துக் கொண்டார். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை நோக்கமே திறமையான இளைஞர்களை சினிமாத்துறைக்கு எடுத்து வருவதுதான். அவர்கள்தான் சினிமாவின் எதிர்காலம்” என்றார்.

சென்னை மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களைச் சுற்றி 45 நாட்களில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this