HomeCinemaஹாட்ஸ்டார் பார்வையாளர்களுக்கு உணர்ச்சிகரமான தருணங்களாக அமையப்போகும் 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸின் புரோமோ...

ஹாட்ஸ்டார் பார்வையாளர்களுக்கு உணர்ச்சிகரமான தருணங்களாக அமையப்போகும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸின் புரோமோ வெளியானது!

Published on

ஹார்ட் பீட் என்ற தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் துவங்குகிறது. இதற்கான புரோமோ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். பல எமோஷனலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் ‘ஹார்ட் பீட்’டுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வரவிருக்கும் இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தர இருக்கிறது.

ஆர்கே மருத்துவமனையில் மூத்த மருத்துவராக ரீனா 2.0 இருக்கும்படியாக இந்த புரோமோ தொடங்குகிறது. தனது புதிய அணியை மிகவும் கட்டுபாடுடனும் அமைதியாகவும் வழிநடத்துகிறார். ஆனால், இந்த மருத்துவர் உலகத்திற்கு அப்பால் ரீனாவின் பழைய நண்பர்களுடனான அவரது விளையாட்டுத்தனமான நட்புறவையும் இந்த புரோமோ காட்டுகிறது. இப்போது சேர்மனாக இருக்கும் அர்ஜுனுடனான அவளது சிக்கலான உறவு மற்றும் தனது தாயார் டாக்டர் ரதிக்காக ரீனா ஏங்குவது போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு இப்போது விடை கிடைக்க இருக்கிறது. பார்வையாளர்களுக்கும் இது உணர்ச்சிகரமான தருணங்களாக அமையும்.

கதையின் சீசன் 2 புதிய பயிற்சியாளர் குழுவையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நிலோஃபர் (கனா காணும் காலங்கள் புகழ் அக்ஷதா), கிரண் (சிவம்), மற்றும் கமல் (அப்துல்), ரோஷினி (அமையா) மற்றும் புதிய தலைமை மருத்துவராக டி.எம். கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். ரீனாவாக தீபா பாலு, டாக்டர் ரதியாக அனுமோல், தேஜுவாக யோக லட்சுமி, பாடினி குமார் அனிதாவாகவும், குணாவாக சர்வா, ராக்கியாக சபரீஷ், அர்ஜுனாக சாருகேஷ், நவீனாக ராம், தேவ்வாக சந்திரசேகர், ராமநாதனாக கிரி துவாரகேஷ், தியானேஷ், ரேயா ஆகியோர் நடித்துள்ளனர்.

தீபக் சுந்தரராஜன் எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடர் விரைவில் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாக இருக்கிறது.

ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங், சரண் ராகவன் இசையமைத்துள்ளார். இந்தத் தொடரை ஏ டெலி ஃபாக்டரி புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் ராஜவேலு தயாரித்துள்ளார். ஆர்ஜே. ஷியாம் சுந்தர் நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this