HomeCinemaஇஸ்லாமிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசினாலும் இது எல்லோருக்குமான சினிமா! -சொல்கிறார் ஹபீபி பட இயக்குநர்...

இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசினாலும் இது எல்லோருக்குமான சினிமா! -சொல்கிறார் ஹபீபி பட இயக்குநர் மீரா கதிரவன்

Published on

‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ ஆகிய படங்களை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியுள்ள படம் ‘ஹபீபி.’

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

ஈஷா என்கிற இளைஞன் இதில் அறிமுகமாக, இயக்குனர் கஸ்தூரிராஜா ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘ஜோ’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மாளவிகா மனோஜ் இதில் நாயகியாக நடித்திருக்கிறார்.

கவிஞர் யுகபாரதி பாடல்கள் எழுத, இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடித்தவர்களில் ஒருவரான சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் ஒரு சிறப்பம்சமாக நவீன AI தொழில்நுட்பத்தில் இசை முரசு நாகூர் ஹனீஃபா அவர்களின் குரலில் ‘வல்லோனே வல்லோனே’ என்கிற பாடலையும் இந்தப்படத்திற்காக உருவாக்கி இருக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறுகையில், “உலகம் முழுவதும் சுமார் 250 கோடி இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் சமூக பொருளாதார வாழ்வியல் சூழலை மையப்படுத்தி ஆயிரக்கணக்கான படங்கள் வருகின்றன. இந்தியாவிலும் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை. பேசுகிற படங்கள் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் தொடர்ந்து வெளி வருகிறது. அதற்கான ஒரு வியாபாரம் தளமும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. தமிழ் திரைப்பட வரலாற்றில் தமிழகச் சூழலில் அந்த இடம் நிரப்பப்படவில்லை என்றே கருதுகிறேன். ஆகவே தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முழுமையான இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையைப் பேசுகிற சினிமாவாகவும் அதேவேளை, எல்லோருக்குமான சினிமாவாகவும் இதை உருவாக்கியிருக்கிறேன்.

ஏற்கனவே நவீன AI தொழில்நுட்பத்தில் மறைந்த மலேசியா வாசுதேவன், எஸ் பி பாலசுப்ரமணியம், சாகுல் அமீது , பம்பா பாக்கியா முதல் பலரின் குரலையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த வரிசையில் ‘வல்லோனே வல்லோனே’ பாடலில் ஏறக்குறைய நாகூர் iஇ எம் ஹனீஃபாவின் குரலை கொண்டு வந்திருக்கிறோம் என்பதை பாராட்டுக்களின் வழியாக அறிகிறோம்.

உலக சினிமா என்கிற வார்த்தையை உச்சரிக்கும்போது ஈரான் என்கிற நாடு நம் எல்லோருடைய நினைவுக்கும் வரும். உலகம் முழுவதும் அந்தத் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் உண்டு.. அப்படி ஒரு படைப்பாக ‘ஹபீபி’யை நம் ரசிகர்களுக்கு தர முயற்சித்து இருக்கிறோம்” என்கிறார்.

சித்திரம் பேசுதடி, படத்தில் தொடங்கி இப்போது ஜெயம் ரவியின் ஜீனி வரை மோஸ்ட் வான்டட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் மகேஷ் முத்துசுவாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.. தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்கிறார். மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த மாலிக் படத்திற்காக கேரள அரசின் சிறந்த கலை இயக்குனர் விருதை பெற்ற அப்புன்னி சாஜன் என்பவர் இந்த படத்தின் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

விரைவில் ‘ஹபீபி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் இந்தப்படத்தை வெளியிடுகிறது.

Latest articles

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

https://www.youtube.com/watch?v=Ia5k1u4ExlI&list=PLAJYBWGrOvf8 துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியையும் முதல் முறையாக...

‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்தார் முரளி ஷர்மா… பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு.

இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா,...

வாரணாசி ஹீரோ ருத்ராவின் அறிமுகம்: மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வாரணாசி படக் குழு அசத்தல்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான 'வாரணாசி' படக்குழு...

 ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என  பிரமாண்ட உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=f5M1d7r2UNQ ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!  ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என  பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது! மிகுந்த எதிர்பார்ப்பை...

More like this