HomeGeneralசாய்ரா இயக்கி நடிக்கும் ‘ஹலோ மிஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்! 

சாய்ரா இயக்கி நடிக்கும் ‘ஹலோ மிஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்! 

Published on

நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’.  இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி.ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ், KPY சரத், சுவாமிநாதன், சத்யன், பிர்லா போஸ், சிட்டிசன் மணி, மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் சண்டைக் காட்சிகளை S.R. ஹரி முருகன் கவனிக்கிறார். பிருந்தா மற்றும் தினேஷ் நடன இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.
பாடல்களுக்கு யுகபாரதி, விவேக், தாமரை, விவேகா ஆகியோர் பாடல்வரிகள் எழுதுகின்றனர். ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், பிரின்ஸ் ஜார்ஜ், சத்ய பிரகாஷ், கபில் கபிலன், அந்தோணி தாசன், ஸ்வேதா அசோக் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.
ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்கிறார். இசையை பிரின்ஸ் ஜார்ஜ் அமைத்துள்ளார். வி. மாணிக்கவாசகம் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், எஸ்.எம்.சேகர் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. காதல், இளமை மற்றும் ரசனையான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஹலோ மிஸ்’, ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

Latest articles

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ தயாரிப்பில், யாமி கெளதம் தர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியாவின் ஃபேன்டஸி...

நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் ‘டிஸ்கோ’ – ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட்! 

'அஞ்சக்கள்ளகோக்கன்' (Anchakkallakokkan) படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் உல்லாஸ் செம்பன் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான 'டிஸ்கோ' (Disco) படத்தின்...

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா கூட்டணியின் ‘லைட்வெயிட்,பேபி’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஃபிட்னஸ் உலகை வித்தியாசமான முறையில் இணைத்து, திரைப்படத்தின் தனித்துவமான உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ‘லைட்வெயிட், பேபி' படத்தின் ஃபர்ஸ்ட்...

ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ள ‘7 ஸ்டார் பாய்ஸ்’ செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது!

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடித்திருக்கும் '7 ஸ்டார் பாய்ஸ்' செப்டம்பர் மாதம் 4-ம்...

More like this