HomeGeneralநடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் 'டிஸ்கோ' - ஃபர்ஸ்ட்...

நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் ‘டிஸ்கோ’ – ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட்! 

Published on

‘அஞ்சக்கள்ளகோக்கன்’ (Anchakkallakokkan) படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் உல்லாஸ் செம்பன் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘டிஸ்கோ’ (Disco) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
‘அங்கமாலி டைரீஸ்’ வெற்றிக்குப் பிறகு, பிரபல நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் இப்படத்திற்கு செம்பன் வினோத் ஜோஸ் திரைக்கதை எழுதியுள்ளார்.
செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.
ஆண்டனி வர்கீஸுடன் இணைந்து தேவ் மோகன், லுக்மேன் அவ்ரான், அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத் ஜோஸ், சாகர் சூர்யா, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், ஃபெமினா ஜார்ஜ், கல்யாணி அணில், மீரா வாசுதேவன், காயத்ரி சுரேஷ், செந்தில் கிருஷ்ணா, மணிகண்டன் ஆச்சாரி, அப்பானி சரத், சினோஜ் வர்கீஸ் மற்றும் வினீத் தட்டில் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர்கள் அனைவரும் கருப்பு உடையில் கையில் துப்பாக்கிகளுடன் சர்வதேச ஹாலிவுட் ஆக்சன் த்ரில்லர் பாணியில் அல்ட்ரா-ஸ்டைலிஷ் தோற்றத்தில் காட்சிளிக்கின்றனர். டைட்டில் லோகோவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி குறியீடு, இது ஒரு மிகச்சிறந்த ஹை-வோல்டேஜ் ஆக்ஷன் மற்றும் கன்-ஃபைட் என்டர்டெய்னராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அல்ட்ரா-மாஸ் சர்வதேச ஸ்டைலில் உருவாகியுள்ள ‘டிஸ்கோ’ திரைப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this