HomeCinemaகே பி ஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள்...

கே பி ஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு படமாக உருவாகிறது!

Published on

‘காந்தி கண்ணாடி’ என்ற திரைப்படத்தை தமிழ் சினிமாவில் பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெய்கிரண் முதல் படமாக தயாரிக்கிறார். படம் எளிமை மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது படக்குழு முழு உற்சாகத்துடன் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படம் பற்றி தயாரிப்பாளர் ஜெய்கிரண் பேசியபோது, “காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மட்டுமல்ல, எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையை முதன்முறையாக கேட்டவுடனே என் நெஞ்சை தொட்டது போல் ஒரு உணர்வு இருந்தது. படம் முடிந்த பிறகும், ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு படமாக இது உருவாகும் என நம்புகிறேன். பாலா, ஷெரீஃப் மற்றும் மற்ற திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்ளுகிறேன். சினிமாவுக்கு மக்களைத் தூண்டும் சக்தி உண்டு – இந்தப் படத்துக்கு அந்தத் தீப்பொறி இருக்கிறது” என்றார்.

‘கலக்கப்போவது யாரு’ பாலா, இந்த படத்தின் மூலம், ஒரு ஆழமான உணர்ச்சி கொண்ட கதாநாயகனாக திரையில் அறிமுகமாகிறார்.

ஷெரீஃப் இப்படத்தை இயக்குகிறார். இவரது முந்தய படம் ‘ரணம்: அறம் தவறல்’, விமர்சகர்களின் பாராட்டை பெற்று, ரசிகர்களிடமும் பிரபலமடைந்தது.
இப்போது உண்மைக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த புதிய படம், ‘ஃபீல்-குட்’ உணர்வுகளை தழுவிய ஒரு உணர்வுப்பூர்வமான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.

படம் பற்றி இயக்குநர் ஷெரிப் பேசியபோது, “ரணம் போன்ற ஒரு ஆழமான, எடையுள்ள கதைக்குப் பிறகு, நான் ஒரு நிலையான, மனதிற்கு நெருக்கமான, வாழ்க்கையைப் பற்றிய படத்தை இயக்க விரும்பினேன். ‘காந்தி கண்ணாடி’ எனக்கு மிக நெருக்கமான படம். தயாரிப்பாளர் ஜெய்கிரண், கதையை கேட்டவுடனே ‘ஆம்’ என்ற பதில் சொல்லியது எனக்கு மிக பெரிய உற்சாகத்தை அளித்தது.

இது பாலாவின் ஹீரோவாகும் முக்கியமான படமாகும், மேலும் தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல் சார் மற்றும் அர்ச்சனா மேடம் போன்ற முக்கிய கலைஞர்கள் இருப்பது, படத்தின் கதைக்கு மேலும் ஆழம் சேர்க்கிறது. இக்குழுவின் உற்சாகம் மற்றும் ஈடுபாடு, நாங்கள் ஒரு உண்மையான, அர்த்தமுள்ள படத்தை உருவாக்குகிறோம் என்பதை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது” என்றார்.

நடிகை நமிதா, படத்தின் முக்கிய நாயகியாக நடித்துள்ளார்.
பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, படம் உணர்வுபூர்வத்தன்மையால் நிறைந்திருக்கிறது.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this