Wednesday, March 11, 2026
spot_img
HomeCinemaஎனக்கு சினிமா பின்னணி அரசியல் பலம் பணபலம் கிடையாது; கடைக்கோடி கிராமம் ஒன்றில் இட்லி சுட்டு...

எனக்கு சினிமா பின்னணி அரசியல் பலம் பணபலம் கிடையாது; கடைக்கோடி கிராமம் ஒன்றில் இட்லி சுட்டு விற்பனை செய்யும் அம்மாவின் மகன் நான்! -கட்ஸ் பட விழாவில் இயக்குநர் ரங்கராஜ் நெகிழ்ச்சி

Published on

புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் இயக்குநர் ரங்கராஜ், நடிகை ஸ்ருதி நாராயணன், ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, டைகர் சக்கரவர்த்தி, ஷிவானி செந்தில், சத்யபதி, இஸ்மாயில், ஸ்ரீலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ரங்கராஜ், ”கலைத் தாய்க்கு என் முதல் வணக்கம். சினிமாவில் நடிகராகி விட வேண்டும் என்று நான் 25 ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கேட்கும் இடங்களில் எல்லாம் பணம் பணம் என்ற ஒன்றைத்தான் கேட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் மன உளைச்சல் ஆகி, விலகி விடலாம் என தீர்மானித்து விட்டேன். அப்போது என்னுடைய நண்பர்கள் குறும்படங்களை இயக்கினார்கள், 15 லட்சத்தில் ஒரு படத்தினை தயாரிக்க முடியும் என்றார்கள். இது எனக்கு நம்பிக்கையை தந்தது. படத்தை தயாரிக்க தொடங்கினேன். படத் தயாரிப்பு குறித்து எனக்கு எதுவும் அப்போது தெரியாது. படத்தின் பணிகள் தொடங்கிய பிறகுதான் 15 லட்சத்தில் ஒரு படத்தில் உருவாக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். முன்வைத்த காலை பின் வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து போராடினேன். சின்ன வயதில் இருந்தே நான் குவாலிட்டி விஷயத்தில் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன். இந்த சமயத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு பக்கபலமாக நின்றார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

எனக்கு சினிமா பின்னணி கிடையாது. அரசியல் பலம் கிடையாது. பணபலம் கிடையாது. கடைக்கோடி கிராமம் ஒன்றில் இட்லி சுட்டு விற்பனை செய்யும் அம்மாவின் மகன் நான். இன்று நான் ஒரு நடிகனாகி விட்டேன். இதனை என்னாலேயே நம்ப முடியவில்லை.

இந்த படத்திற்காக நிறைய நண்பர்கள் எனக்கு உதவினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் நன்றாக ஓடி லாபம் சம்பாதித்தால், எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் வெற்றி பெற்றால், கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதத்தை சினிமா துறையில் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்காக வழங்க திட்டமிட்டிருக்கிறேன்.

சிறிய முதலீட்டு திரைப்படங்கள் வெற்றி பெறாததற்கு காரணம் டிக்கெட் கட்டணம் தான். அஜித் குமாரை திரையில் 200 ரூபாய் கொடுத்து பார்ப்பார்கள். என்னை யார் 200 கொடுத்து திரையில் பார்ப்பார்கள். இதனால் சிறிய முதலீட்டு திரைப்படங்கள் தோல்வியை தான் தழுவும்.‌ அதனால் டிக்கெட் விலையை குறைத்தால் சிறிய முதலீட்டு திரைப்படங்களும் வெற்றி பெறும்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இருக்கும். அதை நீக்குவது சினிமா மட்டும் தான். சினிமா என்ற ஊடகம் தான் மக்களின் எல்லா வலியையும் நீக்கும்.

டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக இருக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!