HomeCinemaசிறந்த விழிப்புணர்வு படம், சிறந்த விழிப்புணர்வு பட இயக்குநர்... நடிகர் கோபி காந்தி இயக்கியுள்ள 'டொனேட்'...

சிறந்த விழிப்புணர்வு படம், சிறந்த விழிப்புணர்வு பட இயக்குநர்… நடிகர் கோபி காந்தி இயக்கியுள்ள ‘டொனேட்’ படத்துக்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் 2025 விருது விழாவில் அங்கீகாரம்!

Published on

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், தயாரிப்பாளர், பாஜகவை சேர்ந்த நடிகர் கோபி காந்தி இயக்கியுள்ள ‘டொனேட்’ படம் சிறந்த விழிப்புணர்வு படம், சிறந்த விழிப்புணர்வு பட இயக்குனர் 2025 பிரிவுகளின் கீழ் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் 2025 விருது பெற்றுள்ளது.

விருது வழங்கும் விழாவில் பல்வேறு சாதனையாளர்கள் மத்தியில் டொனேட் திரையிடப்பட்டது. விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையில் சாதனை புரிந்த சாதனையாளர்களும் பங்கேற்றனர்.

நிகழ்வில் நோபல் உலக சாதனை புத்தக பதிப்பாளர் முனைவர் தியாகு நாகராஜ் மற்றும் அதன் இயக்குநர் முனைவர் ஹேமலதா ஆகியோர்கள் இணைந்து படத்தின் இயக்குனர் கோபி காந்திக்கு பாராட்டு தெரிவித்து  விருதினை வழங்கினார்கள்.

இது குறித்து பேசிய கோபி காந்தி, ”ஒரு வேளை உணவிற்காக கஷ்டப்படும் பிச்சைகாரன் தனக்கு உணவளிக்காத சமுதாயத்திற்கு தனது உடலையே தானமளிப்பதுதான் கதைக்களம் “டொனேட்” படத்தில் வாய்பேச முடியாத காது கேட்காத பிச்சைக்கார கூனன் கதாபத்திரத்தில் முனிதேவன் என்கிற புதுமுக நடிகரை அறிமுகப்படுத்தி உள்ளேன்.

விஜய் முருகன், திவ்யா, எம்.ஆர்.எம், பிரதாப் சிங், ஜெ.கே, சி.எம், உள்ளிட்ட புதுமுக கலைஞர்களுடன் ஸ்ரீவாணிஸ்ரீ, சுஜித், கோகுல்ராஜ், மணிகண்டன் போன்ற குழந்தை நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளேன். அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள்.

ஒரு பிச்சைக்காரனுக்கும் பணக்கார குழந்தைக்கும் உள்ள உணர்வுபூர்வமான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மொழியினரும் பார்க்கும் வகையில் வசனம் இல்லாமல் காட்சி அமைப்பின் மூலமாக படத்தை உருவாக்கியுள்ளேன். ஒளிப்பதிவாளராக குமரன் ஜி, படத் தொகுப்பாளராக ராம்நாத், இசையமைப்பாளரக கோபால் கிருஷ்ணன் ஆகியோர்கள் பணிபுரிந்து உள்ளனர்.

பல்வேறு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள். ஆஸ்கார் விருதுக்காக எடுக்க்கப்பட்ட இப்படத்திற்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் 2025 விருது கிடைத்திருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். பல்வேறு படங்கள் உருவாகி இருந்தாலும் சமூக அக்கறையை கருத்தில் கொண்டு “டொனேட்” விழிப்புணர்வு படத்தை தேர்வு செய்து பாராட்டி கெரவித்துள்ள நோபல் உலக சாதனை புத்தக பதிப்பாளர் முனைவர் தியாகு நாகராஜ் மற்றும் அதன் இயக்குநர் முனைவர் ஹேமலதா ஆகியோர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சமுதாயத்தில் பல்வேறு சேவை செய்யும் சாதனையாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து சமூக மேம்பாட்டிற்கு பாடுபடும் உங்கள் பணி சிறக்க வேண்டும். மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்த விழிப்புணர்வு படம் பங்கேற்க உள்ளது” என்றார்..

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this