HomeCinemaகளைகட்டும் தியேட்டர்கள்... ஜூன் 21-ல் ரீ ரிலீஸாகும், கமல்ஹாசனின் 'குணா.'

களைகட்டும் தியேட்டர்கள்… ஜூன் 21-ல் ரீ ரிலீஸாகும், கமல்ஹாசனின் ‘குணா.’

Published on

கமல்ஹாசன் நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் 1991-ம் ஆண்டு தீபாவளியன்று வெளிவந்த படம் ‘குணா.’ இந்த படத்தில் ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய்ரத்தினம், எஸ். வரலட்சுமி, கிரீஷ் கர்னாட், எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்திருந்தனர்.

இளையராஜா இசையில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில், சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இந்த படத்தை ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ உலகம் முழுவதும் வெளியிட்டது.

33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர்.

இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமத்தில் உள்ள திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே. குணா திரைப்படம் வெளியானபோது கூட திரையரங்குகளில் குணா படத்தில் இடம்பெற்ற வசனங்கள், பாடல்களுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இன்றைய தலைமுறை மஞ்சு மெல் பாய்ஸ் படத்தில் அதனை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடியதை பார்த்து என் உடம்பு புல்லரித்து போனது என்றார் குணாபடத்தை இயக்கிய சந்தானபாரதி.

வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர். 1991 ஆம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாடு அரசு வழங்கியசிறந்த திரைப்படத்திற்கான மூன்றாவது பரிசை குணா வென்றது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கமல்ஹாசனின் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

இந்த படத்தை தமிழ்த் திரைப்பட ஆடியோ உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முண்ணணி நிறுவனமாக திகழ்ந்து வந்த பிரமிட் ஆடியோ குரூப் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது.

Latest articles

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’...

‘டோரதி’ நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது! – நடிகை ஜீவா சுப்பிரமணியம்

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம்...

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4′ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன்...

என்னிடம் ஈகோ இருந்தது; இயக்குநரிடம் என்னை நடிக்க வைத்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று சொன்னேன்! -கில்ட் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கஸ்தூரி ராஜா பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ படக்குழுவினருக்கு கில்ட் தயாரிப்பாளர் சங்கம்...

More like this