HomeGeneralசோனி விழாவில் இந்த விஜயதசமிக்கு அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம்!

சோனி விழாவில் இந்த விஜயதசமிக்கு அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்!

Published on

இந்த விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை வரும் அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றது.

அதிரடி ஆக்‌ஷன் மற்றும் குடும்பப் பாசம், பழிவாங்குதல் கலந்த உணர்வுகள்  என பல அம்சங்களைக் கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘குட் பேட் அக்லி’ உருவாகியுள்ளது.

தனது கடந்த கால வாழ்க்கையை விட்டுவிட்டு குடும்பத்துடன் அமைதியாக வாழ நினைக்கும் ஒரு முன்னாள் கேங்ஸ்டரின் கதைதான் இப்படம். ஆனால் அவரது மகனுக்குப் பிரச்சனை ஏற்படும்போது அவர் மீண்டும் தான் விட்டுச் சென்ற பழைய உலகத்திற்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகின்றது.
ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராப், பிரபு, பிரசன்னா, சுனில், பிரியா பிரகாஷ் வாரியர், கார்த்திகேயா தேவ் மற்றும் ரகு ராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் அதிரடி சண்டைக் காட்சிகள், பழைய நினைவுகளைத் தூண்டும் விஷயங்கள்,ஸ்டைல் மற்றும் மாஸ் பொழுதுபோக்கு என ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமாரின் திரைப்படத்தை இந்த விஜயதசமிக்கு ஒளிபரப்புவதன் மூலம் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு சிறப்பான சினிமா அனுபவத்தை சோனி விழா வழங்குகின்றது.
ராஜாராமன் எஸ்., தென் பிராந்தியங்களுக்கான தலைமை உள்ளடக்க அதிகாரி, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) கூறியதாவது,
“விஜயதசமி என்பது குடும்பங்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடும் ஒரு அழகான பண்டிகை. தமிழ் பொழுதுபோக்கின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் இந்நாளை மேலும் மகிழ்ச்சியானதாக மாற்ற விரும்பினோம்…அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்து, அதிரடியான ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறோம். இந்தப் பண்டிகைக்குப் பொருத்தமான ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும் நிச்சயமாக.
சோனி விழாவின் பயணம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் வகையிலான மறக்க முடியாத பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதே எங்களது நோக்கமாகும். பெரிய திரையில் பார்க்கும் உணர்வையும் உற்சாகத்தையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்வதுடன் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமாரின் திரைப்படத்தைக் கொண்டாடும் மற்றொரு வாய்ப்பையும் இந்த ஒளிபரப்பு ரசிகர்களுக்கு வழங்குகின்றது.”
அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்துடன் இந்த விஜயதசமியைக் கொண்டாடுங்கள்,அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழாவில் மட்டும்.

Latest articles

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=XDN5BFVV_zs பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், 'ஏஒ டி' (AOT) திரைப்படத்தின் மூலம் தனது அகில...

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மைக்...

வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்! -‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படம், கேப்காம் (CAPCOM) நிறுவனத்தின் புகழ்பெற்ற...

டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ‘இது நம்ம குடும்பம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஆனந்த் பாபு கதையின் நாயகனாக நடிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி சைதன்யா சங்கரன் இயக்கியிருக்கும் படம் இது...

More like this