HomeCinemaநடிகர் பெட்ரோ பாஸ்கல் பகிரும் ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படம் குறித்த அனுபவம்...

நடிகர் பெட்ரோ பாஸ்கல் பகிரும் ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படம் குறித்த அனுபவம்…

Published on

‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்/ ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில் அறிமுகமாகவுள்ளார் நடிகர் பெட்ரோ பாஸ்கல். MCU உலகில் ஆறாவது பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படம், ஜூலை 25 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது.

உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கான புரோமோஷனின் போது பெட்ரோ பாஸ்கல் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். வேனிட்டி ஃபேருடன் பேசிய பெட்ரோ, ”1960களில் கதை நடைபெறுகிறது எனும்போது அதற்கேற்றாற் போல எனது உச்சரிப்பும் இருக்க வேண்டும். அதற்காக தனது 100% பங்களிப்பையும் கொடுத்தேன். நான் அதைச் சிறப்பாகச் செய்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. அறுபதுகளின் முற்பகுதியில் அட்லாண்டிக் நடுப்பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து தொடங்க வேண்டும். அந்த பேச்சுவழக்கிற்கு உதவ எனக்கு பயிற்சியாளரும் உடன் இருந்தார்.

நான் நன்றாக பயிற்சி எடுத்தேன். ஒருக்கட்டத்தில் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்து சகஜமாக பேசுங்கள் என்று படக்குழுவினர் கிண்டல் செய்யும் அளவிற்கு நான் அந்த பேச்சுவழக்கில் மூழ்கிப் போனேன். நாம் இதுவரை பார்க்காத உலகத்தை உங்கள் அனைவருக்கும் காட்ட இருக்கிறோம்” என்றார்.

மாட் ஷக்மேன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூ ஸ்டோர்மாக வனேசா கிர்பி, ஜானி ஸ்டோர்மாக ஜோசப் குயின், பென் கிரிம்மாக எபோன் மோஸ்-பக்ராச், கேலக்டஸாக ரால்ப் இனேசன் மற்றும் சில்வர் சர்ஃபராக ஜூலியா கார்னர் ஆகியோர் நடித்துள்ளனர்.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this