HomeCinemaஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் ‘ஃபைட் கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தொடங்கிய படத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக வழங்கும் படம் ‘ஃபைட் கிளப்.’

விஜய் குமார் இந்த படத்தில் கதைநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த படத்தை, ‘ரீல் குட் ஃபிலிம்ஸ்’ ஆதித்யா தயாரித்திருக்கிறார். கிரியேட்டிவ் புரடியூசராக விஜய்குமார் பணியாற்றியுள்ளார்.

அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்க, படத்தின் கதையை சசி எழுதியுள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, கதாநாயகனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படக்குழு:- கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன், அபுபக்கர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

Latest articles

தனது பத்தாவது படத்திற்காக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத...

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள 'பிளாஸ்ட்'...

நல்ல கதைகளைக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர்! -‘ஹபீபி’ பட விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பற்றி இயக்குநர் பார்த்திபன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!!

‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின்...

More like this