HomeCinemaஎக்ஸாம் வெப் சீரிஸ் விமர்சனம்

எக்ஸாம் வெப் சீரிஸ் விமர்சனம்

Published on

எத்தனையோ பேர் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுகிறார்கள். அதில் நன்றாக எழுதியவர்கள் தேர்ச்சியடையாமல் போகலாம்; திறமையும் தகுதியும் இல்லாதவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் இணையலாம். அப்படி நடக்கிறது என்றால், அதன் பின்னணியில் இப்படியான மோசடிகள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி அதிர வைக்கிறது இந்த ‘எக்ஸாம்.’

போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை உறுதிபடுத்திக் கொண்ட ஜான்சி என்ற இளம்பெண், பெண் டி எஸ் பி ஒருவரை கடத்துகிறார். அவரது பெயரைப் பயன்படுத்தி, அதே டி எஸ் பி பொறுப்பில் சேர்கிறார். அந்த பொறுப்பில் இருந்தால், போட்டித் தேர்வுகள் நடக்கும் மையத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை கண்டறிய முடியும் என்பது அவரது திட்டம்.

அத்தனை ரிஸ்க்கான திட்டத்தை செயல்படுத்த அவர் மட்டும் களமிறங்கவில்லை. அவருக்கு பின் ஒரு டீம் இருக்கிறது. அவர்களால் திட்டத்தை சரியானபடி செயல்படுத்த முடிந்ததா? மோசடிகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்க முடிந்ததா என்பதே 7 எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸின் திரைக்கதை… இயக்கம் சற்குணம்

போலி டி எஸ் பியாக துஷாரா விஜயன். அவரது உயரமும் உடற்கட்டும் டி எஸ் பி உடைக்கு சரியாகப் பொருந்தி கம்பீரம் தருகிறது. போட்டித் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்டு சிறைக்கு சென்று அவஸ்தைகளை அனுபவிப்பதாகட்டும், குற்றவாளிகளை தண்டிக்க துடிப்போடு செயலாற்றுவதாகட்டும் நடிப்பு அசத்தல் ரகம்.

வில்லனாக நரேன் மணி பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் மிரட்டியிருக்கிறார். மோசடி மூலம் டி எஸ் பி பதவிக்கு வந்தவராக அதிதி பாலன், துஷாராவுக்கு பின்னணியில் பலமாக இருக்கிற அப்பாஸ், காவல்துறை அதிகாரியாக துரை சுதாகர் என பலர் கவனம் பெறுகிற அளவில் நடித்திருக்கிறார்கள்.

மலை, காடு என சம்பவங்கள் நடக்குமிடங்கள் பசுமையாக, பிரமாண்டமாக இருக்க அவற்றை அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவில் பார்ப்பது மனதுக்கு புத்துணர்ச்சி தருகிறது. சாம் சி எஸ் தந்திருக்கும் பின்னணி இசை கதையின் வேகத்துக்கு சுறுசுறுப்பூட்டுகிறது.

அரசாங்க வேலையில் சேர வேண்டுமென்பது பலரது ஆசை, கனவு, லட்சியம். அந்த கனவில், லட்சியத்தில் எப்படியெல்லாம் மண்ணள்ளிப் போடுகிறார்கள் என்பதை இதுவரை யாரும் இத்தனை விரிவாக எடுத்துக் காட்டியதாக தெரியவில்லை. கண்டிப்பாக புதிய அனுபவம் கிடைக்கும் என்பதால் திரைக்கதையிலிருக்கும் சில குறைகளைப் பொருட்படுத்தாமல் பார்க்கலாம். சீரிஸ் இப்போது அமேஸான் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

Rating 3.5 / 5

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this