HomeCinemaஇளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சுற்றிச் சுழலும் 'எமகாதகி' மார்ச் 7-ம் தேதி வெளியாகிறது!

இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சுற்றிச் சுழலும் ‘எமகாதகி’ மார்ச் 7-ம் தேதி வெளியாகிறது!

Published on

கிராமத்துப் பின்னணியில் முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக  உருவாகியுள்ள ‘எமகாதகி’ திரைப்படம் வரும் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை அசத்தலான போஸ்டரில் வெளியிட்டுள்ளது படக்குழு.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கிராமத்து பின்னணியில் ஒரு இளம்பெண்ணின் மரணத்தைச் சுற்றிய காட்சிகளை திகில் கலந்து காட்டும் டீசர், இப்படம் வித்தியாசமான ஹாரர் ஜானரில் ரசிகர்கள் இருக்கை நுனியில் வைத்திருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

டீசர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார்.  ரூபா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கீதா கைலாசம் மற்றும் பிளாக்‌ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளதாக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம், படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பை செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this