HomeCinemaமனிதர்களுக்கு அதிகரித்திருக்கும் தேவைகளை மையப்படுத்தி காமெடி, காதல், திரில்லர் கலவையாக உருவாகும் எல்லாம் 'நன்மைக்கே.'

மனிதர்களுக்கு அதிகரித்திருக்கும் தேவைகளை மையப்படுத்தி காமெடி, காதல், திரில்லர் கலவையாக உருவாகும் எல்லாம் ‘நன்மைக்கே.’

Published on

அம்பிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற படத்தில், சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ஒன்வே’ என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம் நடிகர் தேர்வு நடக்கிறது.

படத்தை ஜி குரூப் புரொடக்சன் சார்பில் தனசேகரன், கோழிக்கடை கோபால் சேர்ந்து தயாரிக்கின்றனர்.

முன்னணி இயக்குநர்கள் பலரிடம் பணிபுரிந்த ராஜா பரணிதரபிரபு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது முதல் படமாக இயக்குகிறார். அவரிடம் படம் பற்றி கேட்டபோது, ”எல்லாம் நன்மைக்கே படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். மக்களுக்கு பிடித்த கதை இது என்று அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன்.

தம்பி ராமையா, அனுமோகன், கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்பிகாவின் மகளாகவும் கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம்.

இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறேன்” என்றார்.

படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் துவங்கி பொள்ளாச்சி, வால்பாறையில் வளர்ந்து சென்னையில் முடிவடைகிறது.

யானி ஆர். இசையமைக்க, ஜான் பாபு நடன பயிற்சியாளராக பணிபுரிகிறார்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this