Sunday, July 20, 2025
spot_img
HomeCinemaபிரவீர் ஷெட்டியின் நடிப்பு, ஐஸ்வர்யா கவுடாவின் இளமை... புதுமையான காதல் அனுபவம் தரப்போகும் ‘எங்கேஜ்மெண்ட்' படப்பிடிப்பு...

பிரவீர் ஷெட்டியின் நடிப்பு, ஐஸ்வர்யா கவுடாவின் இளமை… புதுமையான காதல் அனுபவம் தரப்போகும் ‘எங்கேஜ்மெண்ட்’ படப்பிடிப்பு நிறைவு!

Published on

ராஜு போனகானி இயக்கத்தில், ஜெயராம் தேவசமுத்ரா தயாரிப்பில் உருவாகி வருகிறது ‘எங்கேஜ்மெண்ட்.’

தெலுங்கு சினிமாவின் அனுபவமிக்க இயக்குநர் ராஜு போனகானி, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற கதையை இளமை ததும்பும் காதலோடும், புதிரான கதைக்களத்துடனும் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் பிரவீர் ஷெட்டி, ஐஸ்வர்யா கவுடா, ராஜகோபால் ஐயர், பால்ராஜ் வாடி, பாவனா, ரஜனி ஸ்ரீகலா, ஷரத் வர்மா, தீப்தி குப்தா, சுஜய் ராம், டிஜே மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு செப்டம்பர் இறுதி வரை வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

கூர்க், சிக்மங்களூர், மைசூர், கோவா, மும்பை, சென்னை, ஐதராபாத் மற்றும் உலகின் பல அழகிய இடங்களில் படமாக்கப்பட்டு ரசிகர்களுக்கு காட்சி விருந்து படைக்க இருக்கிறது.

தயாரிப்பு பணிகள் மற்றும் படப்பிடிப்பின் திட்டமிடல் ஆகியவற்றை மிக கவனமாக கையாண்டதோடு, திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்கி எந்தவித இடையூறுகளும் இன்றி சரியான நேரத்தில் முழு படப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்ததற்கு இயக்குநர் ராஜு போனகானியை தயாரிப்பாளர் ஜெயராம் தேவசமுத்ரா பாராட்டியதோடு, படத்தின் பின்னணி வேலைகளும் இதே விறுவிறுப்புடன் நடக்க படக்குழுவினருக்கு உற்சாகமளித்துள்ளார்.

படத்தின் நாயகன் பிரவீர் ஷெட்டியின் நடிப்பு பார்வையாளர்களை மயக்கும் வகையில் இருப்பதோடு, கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா கவுடாவின் இளமை மற்றும் நடிப்பு ரசிகர்களை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும், அவர்களின் கதாபாத்திரமும் பேசப்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உலக மக்கள் அனைவரையும் கவரக்கூடிய கதை என்பதால் இதனை பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படக்குழு:-
தயாரிப்பு நிறுவனம்: ரோடியம் எண்டர்டெயின்மெண்ட் & சுரம் மூவிஸ்
இயக்குநர்: ராஜு போனகானி
தயாரிப்பாளர்: ஜெயராம் தேவசமுத்திரம்
இணை தயாரிப்பாளர்கள்: லட்சுமிகாந்த்.என்.ஆர், நாராயண சுவாமி.எஸ்
ஒளிப்பதிவு: வெங்கட் மன்னம்
இசை: திலீப் பண்டாரி, ரஜத் கோஷ்
படத்தொகுப்பு: ரவி கொண்டவீட்டி
இணை இயக்குநர்: நாகராஜு தேசாவத்
நடன இயக்குநர்: ராஜ் பைடே
ஸ்டண்ட் இயக்குநர்: டிராகன் பிரகாஷ்
கலை: வெங்கடேஷ் ஆரே
வடிவமைப்பாளர்: லக்கி
பி.ஆர்.ஓ: ஹஷ்வத், சரவணன்

Latest articles

இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும்; தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும்படி இருக்கும்! –‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 

உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்...

இந்த படம் திரில்லராக மட்டுமல்லாது சென்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக  இருக்கும்! -‘பிளாக்மெயில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மு மாறன் 

ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில், மு மாறன் இயக்கியிருக்கும் ’பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட்...

ஆக்கிரமிப்பு சினிமா விமர்சனம்

சாமானிய மனிதன் ஒருவன் ஊரையே நடுங்க வைக்கும் ரவுடியை பழி தீர்க்கும் கதை. ஒரு வரியாக சொல்லும்போது இதெல்லாம் ஆயிரம்...

விஷால் நடிக்கும் 35-வது படம் பூஜையுடன் துவக்கம்! சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிறது.

விஷால் நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த...

More like this

இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும்; தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும்படி இருக்கும்! –‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 

உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்...

இந்த படம் திரில்லராக மட்டுமல்லாது சென்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக  இருக்கும்! -‘பிளாக்மெயில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மு மாறன் 

ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில், மு மாறன் இயக்கியிருக்கும் ’பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட்...

ஆக்கிரமிப்பு சினிமா விமர்சனம்

சாமானிய மனிதன் ஒருவன் ஊரையே நடுங்க வைக்கும் ரவுடியை பழி தீர்க்கும் கதை. ஒரு வரியாக சொல்லும்போது இதெல்லாம் ஆயிரம்...
error: Content is protected !!