HomeMovie Reviewடியர் ரதி சினிமா விமர்சனம்

டியர் ரதி சினிமா விமர்சனம்

Published on

டார்க் காமெடி சப்ஜெக்டில் தயாரான டியர் ரதி.

மதன், ரதி என்ற பாலியல் தொழிலாளியைச் சந்திக்கிறான். அவள் மீது ஒருவித ஈர்ப்பு உருவாகிறது. அவளுடன் ஒரு நாள் முழுவதையும் செலவிட ஆசைப்படுகிறான். அதற்காக அவள் கேட்கும் பணத்தை எடுத்துக்கொண்டு, அவளை அழைத்துக்கொண்டு புறப்படுகிறான்.

அதே நேரத்தில் ஒரு போலீஸும், ஒரு கொலைகார ரவுடியும் அவளைத் தேடி புறப்படுகிறார்கள். அவர்கள் எதற்காக அவளை தேடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியவரும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்களிடம் அவள் சிக்கினாளா இல்லையா என்பது கதையின் ஒரு பகுதி…

ரதி மீது மதனுக்கு காதல் உருவாவது, அதை அவன் அவளிடம் சொல்வது, அதற்கு அவள் தருகிற ரியாக்சன் என கடந்தோடும் காட்சிகளும் திரைக்கதையில் உண்டு…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திறமை காட்டிய சரவண விக்ரம் இந்த படத்தின் கதாநாயகன். சீரியலில் வளவளவென வசனம் பேசுவதுபோல் இந்த படத்திலும் நிறைய பேசுகிறார். கருத்து என்ற பெயரிலும் ஏதேதோ சொல்கிறார். நடிப்பு பொறுத்தவரை அப்பாவித்தனம், காதல், அசடு வழிதல், கோபம் என பலவற்றை வெளிப்படுத்தியிருப்பதில் குறையில்லை.

பாலியல் தொழிலாளி என்றாலும் கவர்ச்சியோ ஆபாசமோ காட்டுவதற்கு அவசியமில்லை. அப்படி உருவாக்கப்பட்டுள்ளதால் தனித்துவம் பெறுகிறது ரதியின் கதாபாத்திரம். ரதியாக வருகிறவர் லட்சணமாக இருக்கிறார்; எளிமையான நடிப்பால் கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார்.

உருட்டல், மிரட்டல், வெட்டுக்குத்து, துப்பாக்கிச் சூடு ரவுடித்தனத்தை அலட்டலாக செய்திருக்கிறார் ரதியைத் தேடியலையும் ராஜேஷ் பாலச்சந்திரன்.

போலீஸ் அதிகாரியாக வருகிற சரவணன் பழனிசாமி தன் துப்பாக்கியை ரதியிடம் பறிகொடுத்து விட்டு, அவளை கண்டுபிடிப்பதற்குள் படுகிற அவஸ்தைகள் பரிதாபமாக இருக்கிறது.

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்; பின்னணி இசை கதையோட்டத்துக்கு போதுமானதாக இருக்கிறது. லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு நேர்த்தி.

காதல், கல்யாணம், காமம் என பலவற்றை மனம்போன போக்கில் கலந்து, இதெல்லாம் ஜென்ஸி தலைமுறைக்கு பிடிக்கும் என்ற நினைப்பில் காட்சிகளை தொகுத்திருக்கிறார் இயக்குநர் பிரவீன் கே.மணி. ஜென்ஸி தலைமுறையை திருப்திபடுத்த வித்தியாசமான காட்சியமைப்புகள் மட்டுமே போதாது; அழுத்தமான கதையும் தேவை. அது இருந்திருந்தால் டியர் ரதியை பயர் விட்டுப் பாராட்டியிருக்கலாம்.

Rating 2 / 5

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this