HomeCinemaஆஸ்கார் விருதுக்காக விழிப்புணர்வு படம் தயாரித்து இயக்கி வெளியிட்ட கோபி காந்தி!

ஆஸ்கார் விருதுக்காக விழிப்புணர்வு படம் தயாரித்து இயக்கி வெளியிட்ட கோபி காந்தி!

Published on

ஆஸ்கார் விருதுக்காக ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், பாஜகவை சேர்ந்த நடிகர் கோபி காந்தி தயாரித்து, இயக்கியுள்ள ‘டொனேட்’ விழிப்புணர்வு பட வெளியிட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது.

நிகழ்வில் படம் பற்றி பேசிய இயக்குநர் கோபிகாந்தி ஒரு பிச்சைக்காரனுக்கும் பணக்கார குழந்தைக்கும் உள்ள உணர்வுபூர்வமான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மொழியினரும் பார்க்கும் வகையில் வசனம் இல்லாமல் காட்சி அமைப்பின் மூலமாக படத்தை உருவாக்கியுள்ளேன்.

பிச்சைக்கார கதாபத்திரத்தில் முனிதேவன் என்கிற புதுமுக நடிகரை அறிமுகப்படுத்தி உள்ளேன். விஜய் முருகன், திவ்யா, எம்.ஆர்.எம், பிரதாப் சிங், ஜெ.கே, சி.எம், உள்ளிட்ட புதுமுக கலைஞர்களுடன் ஸ்ரீவாணிஸ்ரீ, சுஜித், கோகுல்ராஜ், மணிகண்டன் போன்ற குழந்தை நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளேன்.

ஒளிப்பதிவாளராக குமரன் ஜி, படத் தொகுப்பாளராக ராம்நாத், இசையமைப்பாளரக கோபால் கிருஷ்ணன் ஆகியோர்கள் பணிபுரிந்து உள்ளனர். மேலும் பல்வேறு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள்.

விருதுக்காக மட்டுமே இப்படத்தை இயக்கியுள்ளேன். அமேசான், நெட்பிலிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன். படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். படத்தை அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 97வது ஆஸ்கார் விருது போட்டி தேர்வுக்கு அனுப்பியுள்ளேன்.

நார்வே, கேன்ஸ், பிரான்ஸ், பெர்லின் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு விழிப்புணர்வு படத்திற்கான விருது பிரிவின் கீழ் படத்தை அனுப்பவுள்ளேன்” என்றார்.

Latest articles

உற்சாகமாக நடந்த, பவிஷ் நாராயணன் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

கரு. பழனியப்பன் இயக்கும் ‘குக்கர்’ திரைப்படத்தின் தலைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

கரு. பழனியப்பன் இயக்கும் 'குக்கர்' திரைப்படத்தின் தலைப்பை இன்று (15-06-2026) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… -நடிகர் சௌந்தரராஜா 

நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம்...

More like this