HomeCinemaநாட்டுப்புறக் கலைஞர்களின் பட்டிதொட்டியெங்கும் பட்டய கிளப்பிய பாடல்களுடன் உருவான டப்பாங்குத்து திரைப்படம் நவம்பர் 29-ல் ரிலீஸ்!

நாட்டுப்புறக் கலைஞர்களின் பட்டிதொட்டியெங்கும் பட்டய கிளப்பிய பாடல்களுடன் உருவான டப்பாங்குத்து திரைப்படம் நவம்பர் 29-ல் ரிலீஸ்!

Published on

மதுரை மண்ணின் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புதிய திரைப்படம் ‘டப்பாங்குத்து.’

மதுரையை சேர்ந்த பாண்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆட்டக்காரன்.அவன் தன் குழுவினருடன் சேர்ந்து மதுரையை சுற்றி உள்ள ஊர்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறான். அவனுடைய தாய் மாமன் தர்மலிங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கு நாடக நடிகர்களை புக் பண்ணி கொடுக்கும் ஒரு புரோக்கராக இருக்கிறார். அதே ஊரை சேர்ந்த தனம் பாண்டியோட கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று ஆடுவதற்கு முடிவு செய்கிறாள். ஆனால் தர்மலிங்கமா தனத்தை பாண்டியின் குழுவில் சேர்ந்து ஆடக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறான். இதனால் பாண்டிக்கும் தர்மலிங்கத்திற்கும் மோதல் ஏற்படுகிறது தர்மலிங்கம் ஏன் தனத்தை ஆடக்கூடாது என்று சொல்கிறான், தனத்திற்கு பின்னணி என்ன?ஏன் தர்மலிங்கம் அவளை ஆடக்கூடாது என்று கூறுகிறான்.. தனம் பாண்டியோட மேடை ஏறினாளா இவைகளை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு மூலம் கதாநாயகனாக அறிமுகபடுத்தப்பட்ட சங்கரபாண்டி கதாநாயகனாக நடிக்க தீப்தி கதாநாயகியாக நடிக்கிறார். காதல் சுகுமார், ஆன்ரூஸ், துர்கா,விஜய் கணேஷ், ரோபோ சந்துரு, மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் பறவை முனியம்மா, கரிசல் கருணாநிதி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், கிடாக்குழி மாரியம்மா, ஆக்காட்டி ஆறுமுகம், செந்தில் ராஜலட்சுமி, என  இத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த பாடல்கள் அனைத்தையும் தீனா மாஸ்டர் பிரமாண்டமாக நடனம் அமைத்துள்ளார்.. தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது.. இப்படத்தின் கலையை சிவாயாதவ் கவனிக்க, ஒளிப்பதிவை ராஜா கே பக்தவச்சலம் கவனிக்க, சரவணனின் இசையில், குணசேகரனின் கதை திரைக்கதை வசனத்தில், முத்துவீராவின் இயக்கத்தில் மதுரை மண்ணின் மணம் மாறாமல் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

சென்சார் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் இம்மாதம் நவம்பர் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:-
தயாரிப்பு – Modern Digitech Media LLP
இயக்கம் – முத்துவீரா
கதை திரைக்கதை வசனம் – எஸ் டி குணசேகரன்
ஒளிப்பதிவு – ராஜா கே பக்தவச்சலம்
இசை – சரவணன்
நடனம் – தீனா மாஸ்டர்
சண்டை பயிற்சி – ஆக்க்ஷன் பிரகாஷ்
மக்கள் தொடர்பு – எஸ் செல்வரகு

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this