HomeGeneralஅக்டோபர் 2-ல் ரிலீஸ்... ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி அறிவித்த 'டோன்ட் ட்ரபிள் தி...

அக்டோபர் 2-ல் ரிலீஸ்… ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி அறிவித்த ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படக்குழு! 

Published on

எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்   – Don’t Trouble The Trouble’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் – சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம்… கலகலப்பான ஃபேண்டஸியான சாகச அனுபவத்தை வழங்கவுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டு தேதி தொடர்பான போஸ்டர்- ஒரு ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி இருப்பதுடன்.. பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் மாயாஜால அனுபவத்தையும் உணர்த்துகிறது.
தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கதையின் மைய கருவாக உள்ள சுவாரசியமான ஃபேண்டஸி அம்சம் – அந்த  டீசரில் இடம்பெற்றிருந்தது. இப்படத்தின் ஃபேண்டஸியான கதைக்களமும், அதன் தனித்துவமான பின்னணியும், படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் இசையமைப்பாளர் கால பைரவாவின் இசையில் உருவான கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) என்ற அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான பாடலை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டனர்.
‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்   – Don’t Trouble The Trouble’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் தனது மாயாஜால ஃபேண்டஸி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக உள்ளது

Latest articles

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பிரமாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக...

ஷூட்டிங்ல கால்ல பலமா அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்ருச்சு! -வலியோடு நடித்த அனுபவம் பற்றி மண்டாடி பட விழாவில் பகிர்ந்த நடிகர் சூரி

சூரி நடித்துள்ள மண்டாடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் நடிகர் சூரி பேசும்போது "எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப...

டார்க் காமெடி படத்தை லியோ விஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நடிகை நித்யா மேனன்!

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன் (Leo Vision)...

More like this