HomeGeneralடார்க் காமெடி படத்தை லியோ விஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நடிகை நித்யா மேனன்!

டார்க் காமெடி படத்தை லியோ விஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நடிகை நித்யா மேனன்!

Published on

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தை, நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Keyuri Productions Pvt Ltd) நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் டி கே இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார். ஃபேண்டஸி வித் டார்க் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் வி எஸ் ராஜ்குமாரின் லியோ விஷன் நிறுவனமும், நடிகை நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Keyuri Productions Pvt Ltd) நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் விக்ரம் கே. குமார் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார்.
லியோ விஷன்- கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்- நித்யா மேனன்- இயக்குநர் டி கே மற்றும் விக்ரம் கே. குமார் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை பற்றிய கூடுதல் தகவல்களையும், இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தின் டைட்டில் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Latest articles

ஷூட்டிங்ல கால்ல பலமா அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்ருச்சு! -வலியோடு நடித்த அனுபவம் பற்றி மண்டாடி பட விழாவில் பகிர்ந்த நடிகர் சூரி

சூரி நடித்துள்ள மண்டாடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் நடிகர் சூரி பேசும்போது "எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப...

இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு!

போதைக்கு எதிரான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தென்னிந்தியத் தமிழ் திரைப்படம் ‘நல்லபடம்’. Harish cinemas சார்பில்...

இளைய திலகம் பிரபு – விஜய் வர்மா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

இளைய திலகம் பிரபு - விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்தை ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’...

More like this