HomeCinema‘திரௌபதி 2’ சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல; அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி,...

‘திரௌபதி 2’ சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல; அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கிறது! -இசையமைப்பாளர் ஜிப்ரான்

Published on

வெவ்வேறு ஜானர்களில் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று கதையான ‘திரெளபதி 2’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்து கொண்டதாவது, “நாம் வாழும் காலத்தைத் தாண்டி, கடந்த காலத்தை நினைவூட்டும் இசையை உருவாக்குவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த நன்றி. ‘திரௌபதி 2’ ஒரு சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல! அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கிறது. கமல்ஹாசன் சார் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தில் இசையில் பல புதிய விஷயங்களை ஆராய்ந்து கொண்டு வந்தேன். அதேபோன்று நிறைய ஆராய்ந்து இந்தப் படத்திலும் புது இசையை கொடுத்திருக்கிறேன். பிலிப் கே. சுந்தரின் அற்புதமான ஒளிப்பதிவுக்கு இணையாக பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது என நம்புகிறேன். நாளை திரையரங்குகளில் படம் பார்க்க ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this