HomeCinemaஇயக்குநர் தயாள் பத்மநாபன் மீண்டும் ஒரு த்ரில்லர் கதையை இயக்குகிறார்! படப்பிடிப்பு துவங்கியது.

இயக்குநர் தயாள் பத்மநாபன் மீண்டும் ஒரு த்ரில்லர் கதையை இயக்குகிறார்! படப்பிடிப்பு துவங்கியது.

Published on

உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைக்கதைகளால் எப்போதும் பாராட்டைப் பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன், தற்போது “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற தலைப்பில் உருவாகும் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் பூஜையுடன் துவக்கியுள்ளார்.

இந்த படத்தை 2M Cinemas சார்பில் K.V. சபரீஷ் அவர்கள் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக D Pictures சார்பில் தயாள் பத்மநாபன் இணைந்துள்ளார்.

இந்தப் படம், “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஒரு பத்திரிகையாளர் மர்மக் கொலை வழக்கின் பின்னணியில் நடந்த அரசியல், சினிமா மற்றும் ஊடக கலவையை நவீன கண்ணோட்டத்தில் பிரதிபலிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.

இயக்குநராகவும், இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றும் தயாள் பத்மநாபன், சமீபத்தில் பெற்ற “Best Director Award” (Tamil) வெற்றியின் வெள்ளத்தில், இன்னொரு வித்தியாசமான முயற்சியாக இந்தப் படத்தை இயக்குகிறார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இலவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் தயாள் பத்மநாபன் “இது ஒரு சாதாரண குற்றக் கதை அல்ல. இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறது. எங்கள் தயாரிப்பாளர் K.V. சபரீஷ் அவர்களின் ஆதரவால், இந்தப் படம் ஒரு வலிமையான கலை மற்றும் உண்மைச் செய்தி கலந்த படைப்பாக மாறுகிறது” என்றார்”.

படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளதுடன், தொடர்ந்து சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தீவிரமாக நடைபெற உள்ளது.

படக்குழு:-

தயாரிப்பு நிறுவனம்: 2M Cinemas

தயாரிப்பாளர்: K.V. சபரீஷ்
இணை தயாரிப்பாளர்: தயாள் பத்மநாபன் (D Pictures)
கதை & இயக்கம்: தயாள் பத்மநாபன்
திரைக்கதை & வசனம் : கவிதா பாரதி & தயாள் பத்மநாபன்
ஒளிப்பதிவு: M.V. பனீர்செல்வம்
படத்தொகுப்பு : V. பூபதி
இசை & பின்னணி இசை: தர்புகா சிவா
தயாரிப்பு வடிவமைப்பு: அன்பு
மேக்கப்: குப்புசாமி
ஆடை வடிவமைப்பு: ரமேஷ்
தயாரிப்பு நிர்வாகி: மரியப்பன்
மக்கள் தொடர்பு : ரேகா

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this