HomeCinemaஹனுமான் பட ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்... பிரமாண்ட கான்செப்ட் போஸ்டர் வெளியீடு!

ஹனுமான் பட ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்… பிரமாண்ட கான்செப்ட் போஸ்டர் வெளியீடு!

Published on

‘ஹனுமான்’ படம் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் யோதா திரைப்படமான “மிராய்” படத்தில் நடித்து வருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் அடுத்த படைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேஜா சஜ்ஜா – பீப்பிள் மீடியா பேக்டரி கூட்டணியின் இரண்டாவது திரைப்படம்.

TG விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரிக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தரமான தொழில் நுட்ப அம்சங்களுடன் உருவாக உள்ளது.

இன்று வெளியிடப்பட்ட கான்செப்ட் போஸ்டர் அசத்தலான அம்சங்களுடன் கண்கவரும் வகையில் அமைந்துள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் ஆதிக்கம் செலுத்தும் அந்த போஸ்டர், நடிகரின் டிரேட் மார்க் “ராக் ஆன்” சைகையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால் அது சாதாரண சைகையாக அல்லாமல், வீடியோ கேம் கன்ட்ரோலரை பற்றியிருப்பது கதைக்களத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

போஸ்டரில் இடம் பெற்றுள்ள – “ராயலசீமா முதல் உலக எல்லை வரை” – எனும் டேக்லைன் கதையின் வேர்கள் ஆந்திர பிரதேசத்தில் இருந்தாலும், உலகம் முழுவதும் உணரக்கூடிய படைப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

இந்த பான்-இந்தியப் படம் சங்கராந்தி 2027-இல் பிரம்மாண்ட திரையரங்க வெளியீடாக வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் தேஜா சஜ்ஜாவின் அடுத்த திரை முயற்சி குறித்த, எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this