HomeCinemaபுஷ்பா, தண்டேல், குபேரா இசையில் கலக்கும் டிஎஸ்பி!

புஷ்பா, தண்டேல், குபேரா இசையில் கலக்கும் டிஎஸ்பி!

Published on

இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில், வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் தந்து, அசத்தியுள்ளார். இந்த சாதனை மூலம் தான் உண்மையான இசை சாம்ராட் என்பதை நிரூபித்துள்ளார்.

புஷ்பா 1 & 2

அல்லு அர்ஜுனின் புஷ்பா பிராஞ்சைஸ் – பாகம் 1 மற்றும் பாகம் 2 – இல் டிஎஸ்பியின் இசை படத்தின் உயிராக இருந்தது. “ஊ சொல்லவா”, “ஸ்ரீவள்ளி” முதல் “புஷ்பா புஷ்பா” என அப்படத்தின் பாடல்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. அவரது இசை, புஷ்பாவின் நறுமணத்தை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது.

தண்டேல்

சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான தண்டேல் திரைப்படத்தில், டிஎஸ்பியின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் (Background Score) தான், அந்த படத்தை புதிய உயரத்திற்கு கொண்டுசென்றன. அழகு, அனுபவம், இசை அனைத்தையும் ஒரே சேர உணர வைத்த இப்படத்தின் வெற்றிக்கு பின்னால் DSP-ன் பங்களிப்பு முக்கிய காரணமாகும்.

குபேரா

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் – எளிய சமூக பின்னணியில் இருக்கும் பிச்சைக்காரர்களை தழுவிய கதை. இதில் டிஎஸ்பி வழங்கிய பாடல்களும், குறிப்பாக ரீரெக்கார்டிங்கும், கதையின் உணர்வுகளை பல மடங்கு உயர்த்துகின்றன. இசையின் வலிமை இப்படத்தை ஒரு வசூல் ராக்கெட்டாக மாற்றியுள்ளது.

இளமையில் துவங்கிய அவரது இசைப் பயணம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில் 2025 ஆம் வருடம் அடுத்தடுத்த பிளாகபஸ்டர் ஹிட்டுகளால் டிஎஸ்பியின் இசை சிகரங்கள் தொடரவுள்ளது. இந்திய இசைக்கான இளவரசர் என்றால் அது ராக்ஸ்டார் டிஎஸ்பி தான்!

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this