HomeCinemaவிஜே சித்து இயக்கி நடிக்கும் டயங்கரம் படத்தை வேல்ஸ் ஃபிலிம் தயாரிக்கிறது!

விஜே சித்து இயக்கி நடிக்கும் டயங்கரம் படத்தை வேல்ஸ் ஃபிலிம் தயாரிக்கிறது!

Published on

விஜே சித்து எழுதி இயக்கி நடிக்கவிருக்கும் டயங்கரம் படத்தை தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இந்தப் படம் விஜே சித்துவின் யூடியூப் வீடியோக்களில் பிரபலமாக பயன்படுத்திய வசனத்தை தலைப்பாக கொண்டுள்ளது. அந்த வார்த்தைக்கு இப்போது திரையில் புதிய பரிமாணத்தில் அதிரடியும் உணர்ச்சி கலந்த கலகல காலேஜ் கேம்பஸ் குரலாக உருவாகிறது.

தனது துள்ளலான பேச்சுத் திறன் யூத் கனெக்ட் மற்றும் சமூக ஊடகங்களில் அசைக்க முடியாத பெர்சனாலிட்டி மூலம், விஜே சித்து தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். சினிமா இயக்குனராகவும் ஹீரோவாகவும் புதிய அவதாரம் எடுத்திருப்பது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படிக் கல்லாக இருக்கிறது.

படம் பற்றி விஜே சித்துவிடம் கேட்டபோது சினிமா எப்போதுமே எனது கனவு. எப்போது எப்படி என்று தெரியவில்லை ஆனால் ஒருநாள் கண்டிப்பாக அடையப்போகிறேன் என்ற நம்பிக்கையோடு வந்தேன். யூடியூப்காக வீடியோஸ் எடுக்கிற இடத்தில் இருந்து செட்டில் ஆக்சன் சொல்ற இடத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டயங்கரம்’ படம் மட்டும் இல்லை அது என் குரல், என் கோபம், என் ஸ்டைல், என் வாழ்க்கை, உங்களோட அதை நான் பகிர்ந்து கொள்வது ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் டாக்டர் ஐசரி கே கணேஷ், பிரதீப் ரங்கநாதன், ஆர் ஜே பாலாஜி போன்ற அறிமுக இயக்குநர்களையும் நடிகர்களையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது வேல்ஸ் நிறுவனத்தின் பெருமை. அதைப்போலவே இப்போது விஜே சித்துவை அறிமுகப்படுத்துவது உற்சாகத்தை தருகிறது. இன்றைய இளைஞர்களின் குரலாகவும் நேர்மையான அழுத்தமான என்டர்டெய்னராகவும் அவர் திகழ்வார்” என்றார்.

இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவிருக்கிறது.வேல்ஸ் நிறுவனம் முழுமையான தியேட்டருக்கான என்டர்டைனராக உருவாக்கி வருகிறது. படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this