HomeMovie Reviewசென்ட்ரல் சினிமா விமர்சனம்

சென்ட்ரல் சினிமா விமர்சனம்

Published on

தொழிலாளிகளை அடிமையாக நடத்தும் முதலாளியை பள்ளி மாணவன் ஒருவனின் கோபம் பதம் பார்த்தால் எப்படியிருக்கும் என்பதே சென்ட்ரலின் கதை.

பள்ளி மாணவன் ‘காக்கா முட்டை’ விக்னேஷ். பிளஸ் டூ எக்ஸாம் எழுதி முடித்ததுமே வேலைக்குப் போய் சம்பாதிக்கும் படியான குடும்பச் சூழல். அரியலூரில் இருந்து சென்னைக்கு வந்து காட்டன் மில் வேலைக்கு சேர்கிறான். அந்த இடத்தில் சிறு தவறு நேர்ந்தாலும் தன் அறைக்கு கூப்பிட்டு அறையும் முதலாளி. தொழிலாளிகளை அடித்து வேலை வாங்கும் சூபர்வைசர். விக்னேஷின் இள ரத்தம் சூடாகிறது. அதன் பிறகு என்னவெல்லாம் நடக்கும் என்பதை உங்கள் விருப்பப்படி யூகித்துக் கொள்ளலாம். யூகித்தபடியே நடப்பதையும் பார்க்கலாம்.

விக்னேஷ் கொஞ்சம் கொஞ்சமாக கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். பீனிக்ஸ் படத்தில் ஹீரோவின் அண்ணணாக இரண்டாவது ஹீரோவாக தடம் பதித்திருந்தார். இந்த படத்தில் அதிரடி ஹீரோவாகியிருக்கிறார். ஹீரோயிஸம் காட்டுவதற்கு எல்லா வாய்ப்பும் உள்ள கதாபாத்திரம். அதை அளவுக்கு மீறாமல் காட்டியிருக்கிறார். காதலி என்று ஒரு கதாபாத்திரம் இருந்தாலும் ரொமான்ஸ், டூயட் என்றெல்லாம் குஷி மூடில் சுற்றித் திரிவதற்கு வாய்ப்புகளில்லை. மெல்லிய கொஞ்சல் மட்டுமே. அதிலும் ஸ்கோர் வாங்குகிறார். எங்க நாம கேள்வி கேட்காம இருக்கோமோ அங்கதான் நாம அடிமையா இருக்கோம்னு அர்த்தம்’ என அவருக்காக எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் ஷார்ப்.

தொழிலாளிகள் என்றால் அடிபணிந்தே வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் முதலாளியாக இயக்குநர் பேரரசு. வைகுண்டம் என்ற பெயரில் வருகிற அவருக்கு தன்னை எதிர்ப்பவர்களை வைகுண்டத்துக்கோ கயிலாயத்துக்கோ அனுப்புகிற வேலை. அந்த வேலையைச் செய்யும் வில்லத்தனத்தில் சிவகாசி பட்டாசாய் சீறியிருக்கிறார்.

சூபர்வைசர் என்றால் தன்னிடம் வேலை பார்ப்பவர்களை கசக்கிப் பிழிவதெல்லாம் சகஜம். இந்த படத்தில் வருகிற சூபர்வைசர் தன்னை எதிர்த்துப் பேசினால் மாஸ் ஹீரோ படங்களில் வருகிற தாதாக்கள் போல் திமிர்த்தனம் காட்டி கொலையே செய்கிறார். உண்மைக்கு நெருக்கமில்லாத அந்த பாத்திரத்தில் திறமை காட்டியிருப்பவர் சித்தா தர்ஷன்.

தொழிலாளர்கள் தொடர்ந்து நசுக்கப்படுவதைக் கண்டு ஒரு கட்டத்தில் கொதித்துக் கொந்தளிக்கும்போது உணர்ச்சிபூர்வமான நடிப்பால் கவனிக்க வைக்கும் ஆறுபாலாவுக்கு நேரும் முடிவு பரிதாபம்.

இந்த படத்தில் ஹீரோயின் எதற்கென்றே தெரியவில்லை. அப்படியொரு பாத்திரத்தில் ஹீரோவின் பள்ளிப் பருவ காதலியாக ஒன்றிரண்டு காட்சிகளில் வந்துபோவதோடு சோனேஷ்வரியின் கடமை முடிகிறது.

இயக்குநர் பாரதி சிவலிங்கமும் நடித்திருக்கிறார். கேடுகெட்ட ஒரு மனிதப் பிறவியின் கதையை முடித்து மூச்சு வாங்குகிறார். கை தட்டத் தோன்றுகிறது.

மற்ற கேரக்டர்களில் வருகிறவர்களின் நடிப்பு கதைக்கேற்ப கச்சிதமாக இருக்கிறது.

இளா தந்திருக்கும் இசையில் ‘என்னடா உலகம்’ பாடல் கானா பாலாவின் குரலில் மனதில் ஏறி அமர்கிறது. ‘மடங்கி மடங்கி’ பாடல் பரிதாபத்தை தூண்டுகிறது.

கதை தொடங்கும் அரியலூரின் நீள அகலங்களை, கதை கலவரச் சூறாவளியில் சிக்கும் சென்னையின் கரடுமுரடான பகுதிகளை, சென்னையை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் பாலங்களை சுற்றிச் சுழன்று படமாக்கி படத்தின் தர மதிப்பு உயர்வுக்கு ஒத்துழைத்திருக்கிறது ஒளிப்பதிவாளர் வினோத் காந்தியின் கேமரா.

கிளைமாக்ஸில், இதுவரை நடந்ததெல்லாம் சாதிய ஏற்றத்தாழ்வுக் கொடுமை என்பதுபோல் உசுப்பிவிடுவது ரசிகர்களுக்கு தேவையில்லாத ஆணியாய் தோன்றலாம்.

எது எப்படியோ மாபெரும் குற்றவாளியாகிவிடுகிற பாதை நோக்கி படத்தின் ஹீரோவை நகர்த்திக் கொண்டுபோகும் திரைக்கதை, அவனை அப்படியே விட்டுவிடாமல் நல்வழிப்பாதைக்கு கொண்டு சென்றிருப்பது பல படைப்புகள் செய்யாதது. செய்யாததை செய்திருப்பதால் குறைகளை கண்டுகொள்ளாமல் படக்குழுவை பாராட்டி ஊக்குவிக்கலாம்.

Rating 3.5 / 5

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...