HomeCinemaவீர அன்பரசு நடித்து இயக்கியுள்ள 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி' தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்! 

வீர அன்பரசு நடித்து இயக்கியுள்ள ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்! 

Published on

வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி.’

படத்தில் மும்பை அழகி ஏஞ்சல் நாயகியாக அறிமுகமாகிறார். ரோபோ சங்கர், பப்லு பிருத்திவிராஜ், பேரரசு, அரவிந்தராஜ், வாழை ஜானகி, மதுமிதா, விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், சிரஞ்சீவி, சூப்பர்குட் சுப்பிரமணி, பாய்ஸ் ராஜன், ஓஏகே சுந்தர், துரைபாண்டியன், ஸ்ரீதேவி, பூர்ணிமா, சுஷ்மிதா, நிஷா இவர்களுடன் ஆகாஷ் முத்து என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

எல்லையை பாதுகாக்கும் ஒரு கமாண்டோவின் வாழ்வில் வரும் காதலை மையப்படுத்தி, வித்தியாசமான காதல் கதையாக இயக்குநர் வீர அன்பரசு இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

குலு மணாலி, கோவா, ஜவ்வாது மலை, மகாபலிபுரம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஜவ்வாது மலையில் உள்ள பீமா நீர்வீழ்ச்சிக்கு கீழ் உள்ள பள்ளத்தாக்கில், சுற்றுலா பயணிகளுக்கு கூட அனுமதி இல்லாத இடத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. மாலை படப்பிடிப்பு முடிந்தவுடன், யூனிட் நபர்கள் ஒவ்வொருவராக பாதுகாப்பாக மேலே அனுப்பிவிட்டு, கேமரா உபகரணங்களை எடுத்து வர முடியாமல், மறுநாள் காலையில் சென்று உபகரணங்களை எடுத்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட ரிஸ்க்கான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவை வில்லியம்ஸ் செய்கிறார். படத்தொகுப்பு சி.ஆர்.புவனேஷ், நடனம் டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், இசை பாவலர் வரதராஜனின் புதல்வர் சிவராமன். பின்னணி இசை கார்த்திக் ராஜா. மக்கள் தொடர் கோவிந்தராஜ்.

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரித்துள்ள இந்த படம் தேர்தலுக்கு மறுநாள் ஏப்ரல் 24-ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் திரைக்கு வருகிறது.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this