புதுமுகம் ப்ரியா சையோன் கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ‘சினிமா பேய்.’
டி. கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்த படத்தில் பவர் ஸ்டார், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஹாரர் – காமெடி கலந்த கதைக்களத்தில் சினிமா உலகின் நிழல் பக்கங்களை சுவாரஸ்யமாக ரசிகர்களுக்கு சொல்லும் விதத்தில் தயாராகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மகாலக்ஷ்மி சினி ஆர்ட்ஸ் ஆர். விஸ்வஸ்வரன் தயாரித்துள்ள இந்த படத்தின் உலகளாவிய விநியோக உரிமையை எஸ். வினோத் குமார் தலைமையிலான 2S எண்டர்டெயின்மென்ட் பெற்றுள்ளது. இது அந்த நிறுவனம் வெளியிடும் 7வது படம். ஆகும்.
இசை: பிரபாகரன் | ஒளிப்பதிவு: வினோத் | எடிட்டிங்: மனோஜ் கார்த்திக் | லைன் புரொட்யூசர்: மதுரை செல்வம்

