HomeCinemaகேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 22-ல் ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்.'

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 22-ல் ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்.’

Published on

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் கேப்டன் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வாழ்நாள் முழுவதும் மக்கள் அவரை அன்புடன் அழைக்கும் ‘கேப்டன்’ என்கிற ஒரு அற்புதமான பெயரையும் அவருக்கு பெற்று தந்தது.

‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.. ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்..

கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ், இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், அரவிந்த்ராஜ் மற்றும் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தை வெளியிடும் ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம், கேப்டனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பான மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தனர்.

கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this