HomeCinemaரேக்ளா பந்தயத்தோடு மலைவாழ் மக்களின் பெரும் துயரத்தை தோலுரித்துக் காட்டப்போகும் 'சோழநாட்டான்' திரைப்படம் துவக்கம்!

ரேக்ளா பந்தயத்தோடு மலைவாழ் மக்களின் பெரும் துயரத்தை தோலுரித்துக் காட்டப்போகும் ‘சோழநாட்டான்’ திரைப்படம் துவக்கம்!

Published on

‘பட்டுக்கோட்டை’ ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் ‘சோழநாட்டான்’ திரைப்படம், திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘உழவன் மகன்’ படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது.

‘சோழநாட்டான்’ திரைப்படத்தில் ‘டைனோசர்ஸ்’ மற்றும் ‘ஃபேமிலி படம்’ புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. லுத்துஃப் நாயகியாக நடிக்க, சௌந்தரராஜன் மற்றும் சுவேதா கர்ணா முக்கிய முன்னணி பாத்திரங்களை ஏற்க, நரேன், சீதா, பரணி மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ரஞ்சித் கண்ணா, “தஞ்சாவூரில் தொடங்கும் இப்படத்தின் கதை சென்னையில் தொடர்கிறது. ரேக்ளா பந்தயத்தோடு நில்லாமல் மலைவாழ் மக்களின் பெரும் துயரத்தை இப்படம் தோலுரித்துக் காட்டுகிறது. ஒரு மிகப் பிரபலமான நடிகர் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பதும் திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவை கையாள, ராஜா முகமது படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். எஃப். எஸ். ஃபைசல் இசையமைக்க, யுகபாரதி சபரீஷ், மற்றும் மணி அமுதன் பாடல்களை எழுத, சித் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பாடல்களை பாடுகின்றனர். கலை: பாபு, சண்டை பயிற்சி: மிராக்கிள் மைக்கேல்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this