HomeGeneral'பெத்லகேம் குடும்ப யூனிட்' சினிமா விமர்சனம்

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ சினிமா விமர்சனம்

Published on

ஹீரோயின் (மமிதா பைஜு) தன்னைவிட பத்துப் பதினைந்து வயது அதிகமுள்ள ஹீரோ (நிவின் பாலி) மீது காதல் வயப்படுகிறார். அவருக்கு ஹீரோவுக்கும் தனக்குமுள்ள வயது வித்தியாசம் பிரச்சனையாக தெரியவில்லை. ஹீரோவுக்கு வயது வித்தியாசம் பிரச்சனையாக தெரிகிறது.

ஹீரோயினுக்கு ஹீரோ மீது காதல் உருவானதன் பின்னணி, அந்த காதலால் ஏற்படும் சிக்கல்கள் என கடந்தோடுகிற திரைக்கதையில் காமெடி கலகலப்பும் நிரம்பியிருக்கிறது.

படம் பார்க்கும் நமக்கு இந்த காதலர்கள் எப்படியாவது இணைய வேண்டும் என்ற உணர்வு வந்து விடுகிறது. இணைகிறார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…

எளிய கதாபாத்திரத்தில் கதையின் கனத்தை உள்வாங்கி முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருக்கிறார் நிவின் பாலி.

கல்லூரிப் பெண்ணாக வருகிற மமிதா வயது வித்தியாசக் காதலை அணுகியிருக்கும் விதம் ரசிக்க வைப்பதாக இருக்கிறது. பாராட்டுக்குரிய நடிப்பு.

மற்ற கேரக்டர்களில் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் கோர்ட், ஷியாம் மோகன், பிந்து பணிக்கர் உள்ளிட்டோரின் நடிப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கிறது.

விஷ்ணு விஜய் இசையில் ‘முட்டாயி வண்டி’ உட்பட மெல்லிசையில் அமைந்த பாடல்கள் இதம் தர, பின்னணி இசை காதல் – எமோஷனல் காட்சிகளுக்கு பொருந்தி பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் கேமரா கோணங்களால் படத்தின் அத்தனை ஃபிரேம்களும் அழகாகியிருக்கிறது.

‘பிரேமலு’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிரிஷ் ஏ டி ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ மூலம் மீண்டும் ஒரு ஃபில் குட் படைப்பைத் தந்து மலையாள திரையுலகின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளார்.

Rating 3.5 / 5

Latest articles

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன் வரும் செப்டம்பர் 6-ம் தேதி கோவையில் நடக்கிறது!

 சூப்பர் ஜட்ஜ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி கோவைக்கு வருகிறது....

பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் ‘மூன்வாக்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸ்!

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும்...

எங்கள் இதயத்திற்கு நெருக்கமான கதைகளைத் தேர்வு செய்து தொடர்ந்து திரைப்படங்களாக தயாரிக்கவுள்ளோம்! -சென்னையில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பட நிகழ்வில் நடிகர் பஹத் பாசில்

பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின்பாலி- மமீதா பைஜூ நடிப்பில் ப்ரீமார்க் புரொடக்ஷன்...

விற்பனை பிரதிநிதிகள் நான்கு பேர் சம்பந்தப்பட்ட காதல் – மோதல் – காமெடியை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருக்கிறோம்! -செப்டம்பர் 18-ல் ரிலிஸாகவுள்ள கோல்ட் கால் படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் தம்பிதுரை 

தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. வித்தியாசமான கதைக்களங்களில் கதையை சொல்லி பார்வையாளர்களை அசத்தும்...

More like this