HomeMovie Reviewபத்தா சினிமா விமர்சனம்

பத்தா சினிமா விமர்சனம்

Published on

வித்தியாசமான கதைக்களத்தில் விண்டேஜ் விருந்தாக பத்தா.

பத்தா ஊரை அலறவிடும் ரவுடி; அவனை மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனியறையில் சில நாட்கள் அடைத்து வைக்க, பத்தா அந்த தனிமை மூலம் தான் இதுவரை செய்ததெல்லாம் தவறு என உணர்ந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்கிறான். இது கதை

பத்தாவுக்கே பாடம் புகட்டும் அந்த சிறுவன் யார்? அவனிடம் பத்தா லாக் ஆனது எப்படி? என்பதெல்லாம் காமெடியும் உணர்வுபூர்வமான சம்பவங்களும் கலந்துகட்டிய திரைக்கதை

ஆரம்பக் காட்சியில் மட்டும் ரவுடியாக உதார் காட்டிவிட்டு, தனியறையில் கிடந்து வெளிவர முடியாமல் தவித்து கண் கலங்குவதெல்லாம் பெரிய ஹீரோக்கள் செய்கிற வேலையில்லை. அதை செய்திருப்பதற்காகவே விஜய் சேதுபதியை கொண்டாட வேண்டும். நடிப்பில் ரவுடித்தனம், கிறுக்குத்தனம், மனைவி மகள் மீது பாசம் என கலந்து பரிமாறியிருக்கும் விதத்திற்காக பாராட்ட வேண்டும்.

பத்தாவை அடைத்து வைக்கிற சிறுவனாக சாய். பயம் பதட்டம் பின்னிப் பிணைந்த பாடி லாங்வேஜும் டயலாக் டெலிவரியும் டேய், ‘நீ மகா நடிகன்டா’ என சொல்லும்படியிருக்கிறது.

ஆத்திரத்தையும் அன்பையும் பலமாக காட்டும் கணவனை தாங்குகிற தூணாக லிஜோமோல் ஜோஸின் நடிப்பு தனித்து தெரிகிறது. மற்ற நடிகர் நடிகைகளின் பங்களிப்பு நேர்த்தி.

பாடல்களில் உற்சாகம் தெறிக்கவிட்டு, காட்சிகளின் பரபரப்புக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார் சாய் அபயங்கர்.

1980 காலகட்டத்தில் நடக்கும் கதை. அதற்கேற்ற ஒளிப்பதிவு, உடை வடிவமைப்பு, கலை இயக்கம் என எல்லா துறையினரும் முழுமையான உழைப்பைக் கொட்டியிருக்க, ‘கேங்ஸ்டர் கதையை இப்படிக்கூட எடுக்கமுடியுமா?’ என ஆச்சரியப்படுத்தி அனுப்புகிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

Rating 3 / 5

Latest articles

டோண்ட் டிரபிள் தி டிரபிள் சினிமா விமர்சனம்

கதைநாயகன் சூரிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வர 25 லட்சம் தேவை. அந்த தேவையை தன்னுடன் தொடர்பிலிருக்கிற சிறுமியின்...

1000 பேருக்கு ‘அரிசி தானம்’ வழங்கி தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய டி ராஜேந்தர்!

திரைக்கலைஞர் டி.ராஜேந்தர் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு 'அரிசி தானம்' வழங்கினார். நிகழ்வு அகில இந்திய டி.ராஜேந்தர்...

‘டோரதி என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்! -நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில், அவர்...

‘சிக்மா’ தமிழ் திரையுலகில் மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது! -நடிகர் ஷிவ் பண்டிட்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பு என ’லீலை’ திரைப்படத்தின் கதாநாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட்....

More like this