HomeCinemaபுதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலி... 'பேபி கேர்ள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! 

புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலி… ‘பேபி கேர்ள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! 

Published on

நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான ‘பேபி கேர்ள்’ படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது.  அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மைய கதாப்பாத்திரமாக,  நிவின் பாலி உள்ளதை இந்த மோஷன் போஸ்டர் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் நிவின் பாலி எவ்வாறு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் காண, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த திரைப்படத்தை சமீபத்தில் ‘கருடன்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய அருண் வர்மா இயக்குகிறார். கதை, திரைக்கதை பிரபல எழுத்தாளர்கள் ஜோடி பாபி & சஞ்சய் எழுதியுள்ளனர்.

இப்படத்தில் நிவின் பாலிக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ், சங்கீத பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் அபிமன்யு திலகன், அசீஸ் நெடுமங்காடு, அஷ்வத் லால் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் படமாக்கப்பட்டிருக்கும்  ‘பேபி கேர்ள்’, விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் நிவின் பாலியின் அழுத்தமான  நடிப்புடன், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரில்லர்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Magic Frames நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this