HomeCinemaநடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் 'காந்தா' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்! 

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்! 

Published on

பாக்யஸ்ரீ போர்ஸ் இந்திய சினிமாவின் புதிய திறமைகளில் ஒருவராக வேகமாக வளர்ந்து வருகிறார்.. மிகவும் எதிர்பார்க்கப்படும் பீரியாடிக் படமான ‘காந்தா’ மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரகனி முதன்மை வேடங்களில் நடிக்க, விமர்சகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.

1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் நடைபெறும் காந்தா திரைப்படம், கண்ணைக் கவரும் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு அழுத்தமான கதையை சொல்லும் திரைப்படமாகும். பாக்யஸ்ரீ, அந்தக் காலத்தின் சீரிய நயத்தையும் மென்மையையும் வெளிப்படுத்தி, மனிதநேயத்தையும் காலத்தைக் கடக்கும் உணர்வுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

துல்கர் சல்மான், சமுத்திரகனி போன்ற அனுபவமிக்க நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்திருக்கும், பாக்யஸ்ரீ தன்னம்பிக்கையுடன் திகழ்கிறார். காலத்துக்கேற்ற உடல் மொழி, உணர்ச்சி பூர்வமான உரையாடல் இவற்றை கட்டுப்பாட்டுடனும் ஆழத்துடனும் வெளிப்படுத்தி, தனது முழு திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

படத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாரம்பரிய தோற்றம், ஏற்கனவே பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

இப்படத்தில் நடித்து வரும் தனது அனுபவத்தைப் பகிர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ்,
“காந்தாவின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகுவது, என் வாழ்க்கையின் மிகச் சிறப்பு மிக்க தருணம். திறமையான குழுவுடன் இணைந்து இந்த அழகான கதையை உயிர்ப்பித்தது மிகப் பெருமை. நாங்கள் உணர்ந்த மாயாஜாலத்தை, பார்வையாளர்களும் உணருவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

காந்தா ஒரு மாறுபட்ட திரை அனுபவத்துடன், தமிழ் சினிமாவுக்கு புதிய நட்சத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் அறிமுகம், இந்த ஆண்டின் மிகவும் பேசப்படும் அறிமுகங்களில் ஒன்றாக அமையும்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this