HomeCinemaவழக்கமான நடிப்பைத் தாண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க 'பிளாக்மெயில்' திரைப்படம் இடம் கொடுத்தது!...

வழக்கமான நடிப்பைத் தாண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க ‘பிளாக்மெயில்’ திரைப்படம் இடம் கொடுத்தது! -மனம் திறக்கிறார் தேஜூ அஸ்வினி 

Published on

தேஜூ அஸ்வினி இளமைத் துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை. அவர்  விரைவில் வெளியாக இருக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘படாக் படாக்’ பாடலில் ஜிவி பிரகாஷ்குமார்- தேஜூ அஸ்வினி இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த வைரல் ஜோடி தற்போது பெரிய திரையிலும் இணைந்துள்ளது. இந்த முறை இன்னும் தீவிரமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் கதைக்களமாகவும் அமைந்திருக்கிறது. எனர்ஜிடிக் மற்றும் யூத்ஃபுல் கதாபாத்திரத்தில் மட்டுமே இதுவரை பார்த்திருந்த தேஜூ அஸ்வினி முதல் முறையாக சீரியஸான பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“வழக்கமான நடிப்பைத் தாண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க ‘பிளாக்மெயில்’ திரைப்படம் இடம் கொடுத்தது. புதுவிதமான அனுபவமாக இது அமைந்தது. இயக்குநர் மு. மாறன் அவர்களின் முந்திய படங்களான ‘கண்ணை நம்பாதே’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். ‘பிளாக்மெயில்’ படத்தில் என்னை கதாநாயகியாக கேட்டபோதும் நிச்சயம் நடிப்பை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரமாக அமையும் என்ற நம்பிக்கையில் சம்மதித்தேன்.

ஜிவி பிரகாஷ் சாருடன் இதற்கு முன்பு கலர்ஃபுல்லான மியூசிக் வீடியோ ஒன்றில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் முற்றிலும் அதற்கு நேரெதிரானது. தொழில்நுட்ப ரீதியாகவும் கதை சொல்லல் மற்றும் எதிர்பாராத திருப்புமுனை மூலம் படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை பார்வையாளர்களை நிச்சயம் கட்டிப்போடும்” என்றார்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this