HomeCinemaமார்ச் 21லிருந்து தியேட்டர்களில் காமெடி திருவிழா... ரீ ரிலீஸுக்கு தயாரான ஆர்யா _ சந்தானம் _...

மார்ச் 21லிருந்து தியேட்டர்களில் காமெடி திருவிழா… ரீ ரிலீஸுக்கு தயாரான ஆர்யா _ சந்தானம் _ நயன்தாரா கூட்டணியின் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்.’

Published on

சிலபல வருடங்கள் முன் வெளியாகி ஹிட்டான படங்களை ரீ ரிலீஸ் செய்வது வழக்கமாகியிருக்கிறது. அதற்கு காரணம் அந்த படங்களுக்கு ரசிகர்கள்கள் தருகிற ஆரவார வரவேற்பு.

அந்த வகையில் எவ்வளவுதான் ஆக்சன் படங்கள், திகில் படங்கள் வந்தாலும் நகைச்சுவை முலாம் பூசிய கலகலப்பான வணிகப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்க தமிழ் ரசிகர்கள் தவறுவதில்லை. இப்போது அப்படிப்பட்ட படங்கள் வராதது தான் ஒரு குறையாக உள்ளதே தவிர, அந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது.

இதற்கு சமிபத்திய உதாரணமாக அப்படிப்பட்ட வகையில் ‘மத கஜ ராஜா’ படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அதுவும் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்துத் தாமதமாக வெளியான போதும் இந்த அளவுக்கு வெற்றியை அடைந்திருக்கிறது என்றால் அப்படிப்பட்ட கலகலப்பான படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மை.

2010 இல் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூல் சாதனையும் பெற்ற படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்.’

ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜீவா, விஜயலட்சுமி, சித்ரா லக்ஷ்மணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், சுப்பு பஞ்சு, அஸ்வின் ராஜா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் வசூலில் சக்கைப்போடு போட்டது.

இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நா. முத்துக்குமார் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பெரிய வெற்றி பெற்றன.

இந்தப் படத்தில் வரும் சந்தானத்தின் ‘நண்பேன்டா’ என்கிற வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவி அனைவராலும் பேசப்பட்ட ஒன்று. அதே நண்பேன்டா என்ற பெயரில் ஒரு படமே வந்தது என்றால் அந்த வசனத்தின் வீச்சை அறிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் இருவரையும் தூண்டிவிடும் விதமாக சந்தானம் அந்தப் படத்தில் தல -தளபதி என்று பேசிய காமெடி பெரிய அளவில் ரசிகர்களைப் போய்ச் சேர்ந்து பேசப்பட்டது.

ஆர்யா நயன்தாராவின் ரொமான்ஸ் காட்சிகள், சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள், யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் என வணிக வெற்றிக்கான பல அம்சங்களும் அதில் இணைந்திருந்தன. அப்படிப்பட்ட ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘படம் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் நவீன தொழில்நுட்பத்தின் மெருகேற்றலுடன் வெளியாகிறது.

படத்தை ராஜேஷ் எம் இயக்கியிருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘சிவா மனசுல சக்தி’ படமும் கூட மீண்டும் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்றது என்பது, அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த வரிசையில் இப்போது ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘படமும் வெளியாக உள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இந்தப் படம் கோடைக்கால விருந்தாக தமிழ்நாடு முழுவதும் தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வரும் மார்ச் 21-ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தை வாசன் விஷூவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே. எஸ். சீனிவாசன் தயாரித்திருந்தார். இப்போது குரு சம்பத்குமாரின் அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம்
மறு வெளியீடு செய்கிறது.

Latest articles

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

More like this