HomeCinemaராஜேஷ் எம் - ஜெயம் ரவி கூட்டணியின் 'பிரதர்' நவம்பர் 29 முதல் ZEE 5...

ராஜேஷ் எம் – ஜெயம் ரவி கூட்டணியின் ‘பிரதர்’ நவம்பர் 29 முதல் ZEE 5 தளத்தில் ஸ்டிரீமிங்!

Published on

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில், ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிரதர் திரைப்படம் ZEE5 தளத்தில் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காமெடி படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு விருந்தாக வருகிறது பிரதர்.

கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில் பூமிகா, நட்டி நடராஜ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் பற்றி பேசிய இயக்குநர் ராஜேஷ் எம், ”பிரதர் திரைப்படம் மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு. திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் தந்த வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது. ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஜெயம் ரவியை இயக்கியது மிக அட்டகாசமான அனுபவம். இப்போது இந்த திரைப்படத்தை உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள், இந்த ZEE5 டிஜிட்டல் வெளியீடு மூலம் ரசிக்கவுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி. ரசிகர்களின் கருத்துக்களை அறிய ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி, ”பிரதர் படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். என்னிடமிருந்து ரசிகர்கள் குடும்பத்தோடு ரசிக்கும் படைப்பை எதிர்பார்த்த நிலையில் இந்தப்படம் மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்தது. அனைவரும் ரசிக்கும்படி அருமையான கதையில், ஒரு அசத்தலான பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தந்ததற்கு இயக்குநர் ராஜேஷிற்கு நன்றி. என்னுடன் இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ZEE5 உடன் வீட்டில் இருந்தபடியே அனைவரும் இப்படத்தை கண்டு ரசிக்கலாம். இப்படத்தை உலகமெங்கும் பரந்த அளவில் ரசிகர்களுக்கு எடுத்து செல்லும் ZEE5க்கு நன்றி” என்றார்.

காதல், பாசம், சென்டிமென்ட் கலந்து வெளியான பிரதர் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த மக்காமிசி பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. இயக்குநர் ராஜேஷ் தனக்கே உரிய பாணியில், கலக்கலான காமெடியுடன் குடும்பங்கள் ரசிக்கும்படி, இப்படத்தை இயக்கியுள்ளார்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this