HomeCinemaகாதலர்களின் பிரேக் அப் கலாச்சாரத்தை மையப்படுத்தி ‘செல்லமே’ இயக்குநர் இயக்கும் 'பிரேக் பாஸ்ட்' படத்தின் இறுதிக்கட்ட...

காதலர்களின் பிரேக் அப் கலாச்சாரத்தை மையப்படுத்தி ‘செல்லமே’ இயக்குநர் இயக்கும் ‘பிரேக் பாஸ்ட்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பு!

Published on

’நிலாகாலம்’, ‘செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் காந்தி கிருஷ்ணா ’பிரேக் பாஸ்ட்’ என்ற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரமாண்டமாக இயக்கியுள்ளார்.

ராணவ், ரோஸிமின், கிருத்திக் மோகன் மற்றும் அமித்தா போன்ற திறமைமிக்க புதுமுகங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இரண்டு முறை ஊர்வசி பட்டம் பெற்ற அர்ச்சனா, சம்பத்ராஜ், கஸ்தூரி, மதன் பாப், ரவி மரியா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், மேஹாஶ்ரீ, இயக்குநர் ரங்கநாதன் ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரேம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெங்கடேஷ்வரா கார்மெண்ட் நிறுவனம் முதன் முறையாக தயாரிக்கும் படம் இது.

படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா பேசியபோது, “காதலர்களிடையே அன்பு மற்றும் சண்டை என்ற எவர்கிரீன் கான்செப்ட்தான் இந்தப் படத்திலும் கையாண்டு இருக்கிறோம். இப்போதுள்ள இளைய தலைமுறையினரிடையே மிகவும் பொதுவான விஷயமாக பிரேக்-அப் மாறிவிட்டது. காதலில் வரும் பிரச்சினைகளை அவர்கள் சகித்துக் கொள்ளாமலும், ஒருவருக்கொருவரின் வலியை உணராமலும் இருப்பதுதான் படத்தின் கரு. இது ஒரு மியூசிக்கல் லவ் படம். பாடல்களில் ஜி.வி.பிரகாஷ் மேஜிக் செய்திருக்கிறார். மணாலி, கஜகஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இன்றைய இளைஞர்களுக்கான சிறந்த படமாக இருக்கும். இந்த படத்தில் அறிமுகமாகும் இளம் திறமைசாலிகள் வரும் நாட்களில் பெரிய அளவில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை மற்றும் இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு பெருமை சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

கிரிஜா வரதராஜன் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் எனப் படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்க, ஆர்.கே. நாகு கலை இயக்கம் கவனித்திருக்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பு செய்கிறார். பல தேசிய விருதுகளை வென்ற லஷ்மி நாராயணன் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையங்கு வெளியீட்டு தேதி விரைவில் தெரியவரும்.

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this