HomeCinemaஇது எளிமையான கதைதான்; உங்களுக்குப் பிடிக்கும் விதத்தில் எடுத்திருக்கிறோம்! -‘ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ்...

இது எளிமையான கதைதான்; உங்களுக்குப் பிடிக்கும் விதத்தில் எடுத்திருக்கிறோம்! -‘ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவின்

Published on

கவின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. முன்னதாக சென்னையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடந்தது.

நிகழ்ச்சியில் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் பேசியபோது, “நான் இந்த இடத்திற்கு வர நிறைய பேர் உதவியிருக்கிறார்கள். அதில் நெல்சன் சார் முதன்மையானவர். அவருக்கு நன்றி. இயக்குநராக அவர் எங்களிடம் நிறைய கேள்வி கேட்பார். என் படத்தை தயாரிக்கும்போதும் அப்படித்தான் இருப்பார் என நினைத்தேன். ஆனால், எனக்கான எல்லா சுதந்திரமும் கொடுத்தார். அவருக்குப் படம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். படம் ஆரம்பிக்கும் முன்பிருந்தே கவின் எனக்கு நல்ல நண்பன். நான் எழுதியிருந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். ரெடின் அண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். என்னுடைய டெக்னிக்கல் டீம் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட். அவர்களுக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான நெல்சன் பேசியதாவது, “’வேட்டை மன்னன்’ படத்தின் போது என்னிடம் சிவபாலன் சேர்ந்தார். ’ஜெயிலர்’ படம் வரையிலுமே என்னிடம் வேலை பார்த்தார். ‘ஜெயிலர்’ பட சமயத்தில்தான் இந்தக் கதை சொன்னார். நீண்ட நாட்கள் என்னிடம் வேலை பார்த்ததால் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ‘ஜெயிலர்’ வெற்றிப் பெற்றால் மட்டுமே சிவபாலன் படம் தயாரிப்பேன் என்று சொல்லியிருந்தேன். இதனால், ‘ஜெயிலர்’ படம் வெற்றி பெற வேண்டும் என அவர்தான் மிகவும் எதிர்பார்த்திருந்தார். படம் வெற்றி பெற்றதும் ‘ப்ளடி பெக்கர்’ தயாரிப்பது உறுதியானது.

கவினை வைத்து செய்யலாம் என சிவபாலன் சொன்னார். ஆனால், இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய்சேதுபதி என சில பெயர் சிவபாலனிடம் சொன்னேன். ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து லுக் டெஸ்ட் செய்தார். அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது.

படத்தின் முதல் பாதி நன்றாகவே செய்திருந்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. முழுப்படமும் பார்த்தபோது சிவபாலனுக்குப் பிறகு சிறப்பாக வேலை செய்திருப்பது கவின்தான். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது.

த்ரில்லர் படமான இதில் டார்க் காமெடி, எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இருக்கும். தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’ படங்களும் வெளியாகிறது. அந்தப் படங்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் கவின், “ஒருவர் மீது மற்றொருவருக்கு இருந்த நம்பிக்கைதான் இந்தப் படம் உருவாக காரணம். நான் இதுவரை என்னென்ன விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தில் கொண்டு வரவேண்டும் என நினைத்தேன். எனக்கு சினிமாவில் ஒரு இடத்தைக் கொடுத்தவர் நெல்சன் சார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இது இருக்கும். ஏனெனில், சிவபாலன் இயக்கும் முதல் படம், நெல்சன் சார் தயாரிக்கும் முதல் படம். நமக்கு அமைந்த நல்ல மனிதர்களுக்காக எந்த விஷயமும் செய்யலாம் என்பதுதான் என் நம்பிக்கை. ’ப்ளடி பெக்கர்’ எளிமையான கதைதான். உங்களுக்குப் பிடிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். படத்தில் என்னுடன் நடித்த நடிகர்கள் எல்லோருமே அவ்வளவு எனர்ஜியாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். டெக்னிக்கல் டீமும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ படங்கள் பார்த்து தீபாவளியை கொண்டாடுங்கள்” என்றார்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி, “இந்த படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. காரணம் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்குத் திருமணம் நடந்தது. படத்தில் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இயக்குநர் சிவபாலன் தனக்கு என்ன வேண்டுமோ அதை மிகச்சரியாக எடுத்துள்ளார். படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும்” என்றார்.

கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை, எடிட்டர் நிர்மல், நடிகர் பார்த்திபன், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், நடிகை பிரியதர்ஷினி, திங்க் மியூசிக் சந்தோஷ்,  ஃபைவ் ஸ்டார் செந்தில் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

Latest articles

LCU மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு…. ‘பென்ஸ்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ரவி மோகன்!

தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான...

சிறப்பு அதிகாரியால் நடத்தப்படும் தேர்தலை புறக்கணித்த CTA உறுப்பினர்கள்… பின்னணியில் நடந்தது இதுதான்.

தென்னிந்திய சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் CTA என்று அழைக்கப்படுகிறது. திரு. கே. ராம்நாத் மற்றும் சினிமா, கேமரா, படத்தொகுப்பு,...

ஜூன் 5-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில் பேட்ரியாட் திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது!

மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன்...

ராம்சரண் இந்த கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது! -‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் புச்சி பாபு பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ என்கிற பிரமாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு...

More like this

LCU மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு…. ‘பென்ஸ்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ரவி மோகன்!

தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான...

சிறப்பு அதிகாரியால் நடத்தப்படும் தேர்தலை புறக்கணித்த CTA உறுப்பினர்கள்… பின்னணியில் நடந்தது இதுதான்.

தென்னிந்திய சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் CTA என்று அழைக்கப்படுகிறது. திரு. கே. ராம்நாத் மற்றும் சினிமா, கேமரா, படத்தொகுப்பு,...

ஜூன் 5-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில் பேட்ரியாட் திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது!

மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன்...